சைதை துரைசாமியின் இலவச பயிற்சி மையத்தில் பயின்ற 10 மாணவர்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆனார்கள்

சென்னை:

சென்னை மாநகரத்தின்  முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். கல்வி அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் இலவச  பயிற்சி மையத்தில் பயின்று 10 மாணவர்கள் ஐஏஎஸ்  அதிகாரிகள் ஆனார்கள்.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி கடந்த பல வருடங்களாக மனிதநேயம் பயிற்சி மையம் என்ற பெயரில் மாணவர்களுக்கு அரசு தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தை இலவசமாக செயல்படுத்தி வருகிறார். இங்கு பயின்ற சுமார் 2,955 பேர் தேர்ச்சி பெற்று தற்போது அரசு உயர் பணிகளில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த மையத்தில் பயின்று சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய மாணவர்களில் 49 பேர் தேர்வாகி உள்ளனர். இதில் 43 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த 43 பேரில் 10 பேர் ஐஏஎஸ் அதிகாரிகளாக தேர்வாகி உள்ளனர். 6 பேர் ஐபிஎஸ் அதிகாரிகளாகவும், 6 பேர் ஐஆர்எஸ் அதிகாரிகளாகவும் மற்றவர்கள் பிற பணிகளுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.