இனி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் சி ஏ படிக்கலாம்

டில்லி

னி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே சி ஏ படிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் அதிக அளவில் சி ஏ படிப்புக்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த சி ஏ எனப்படும் பட்டயக் கணக்காளர் படிப்பை இந்தியப் பட்டயக் கணக்காளர் மையம் நடத்தி வருகிறது.

இந்த படிப்பில் சேர இப்போது குறைந்த பட்ச கல்வித் தகுதி 12 ஆம் வகுப்பு என நிர்ணயம் செய்யபடட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியப் பட்டயக் கணக்காளர் மையம் ஒரு புதிய நடைமுறையை அறிவித்துள்ளது.

அதன்படி இனி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே சி ஏ படிப்பில் சேரலாம்.

இந்நடைமுறை இந்த ஆண்டு முதலே அமல்படுத்தப்படுகிறது.

இது மாணவர் மற்றும் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.