பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை

மிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்ச்சி முடிவுகள் வெளியாகி உள்ளன.

கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வை 10,01,140 மாணவர்கள் எழுதினார்கள்.  இந்த தேர்வின் முடிவுகள் இன்று இணைய தளத்தில் வெளியாகி உள்ளன.   இந்த தேர்வு முடிவுகள் மாணவர்கள் பள்ளியில் அளித்திருந்த மொபைலுக்கு குறும் செய்தி மூலம் மதிப்பெண் விவரங்களுடன் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த தேர்வில் மாணவிகள் 96.4%மும் மாண்வர்கள் 92.5%மும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம்: 98.5 சதவீதத்துடன் முதலிடம்
ஈரோடு மாவட்டம்: 98.38 சதவீதத்துடன் இரண்டாமிடம்
விருதுநகர் மாவட்டம்: 98.26 சதவீதத்துடன் மூன்றாமிடம்
கன்னியாகுமரி: 98.07 சதவீதத்துடன் நான்காமிடம்
ராமநாதபுரம்: 97.94 சதவீதத்துடன் ஐந்தாமிடம்

ஆகிய மாவட்டங்கள் தர வரிசையில் இடம் பெற்றுள்ளன.

பாட ரீதியாக மாணவ மாணவியர்கள் தேர்ச்சி விகிதம் வருமாறு.

மொழிப்பாடம் 96.42
ஆங்கிலம் 96.50
கணிதம் 96.18
அறிவியல் 98.47
சமூக அறிவியல் 96.75
சமூக அறிவியல் 96.75
 

பள்ளி ரீதியாக தேர்ச்சி விகிதங்கள் பின் வருமாறு.

அரசுப் பள்ளிகள்: 91.36 சதவீதம்
அரசு உதவி பெறும் பள்ளிகள்: 94.36 சதவீதம்
மெட்ரிக் பள்ளிகள்: 98.79 சதவீதம்
இருபாலர் பள்ளிகளில் பயின்றோர்: 94.81 சதவீதம்
பெண்கள் பள்ளிகள்: 96.27 சதவீதம்
ஆண்கள் பள்ளிகள்: 87.54 சதவீதம்