பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

சென்னை

நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.

கடந்த மார்ச் மாடம் 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 20அம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றன.   இதில் 10,01,140 மாணவ மாணவிகள் தேர்வு எழுதி உள்ளனர்.   இந்த தேர்வின் விடைத்தாட்கள் திருத்தும் பணி  ஏற்கனவே நிறைவு பெற்றுள்ளது.   நாளைக் காலை இந்த தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

இந்த தேர்வு முடிவுகள் www.tnresults.ac.in,  www.dge1.tn.nic.in,   www.dge2.tn.nic.in ஆகிய இணைதளங்களில் வெளியிடப்பட உள்ளன.  பள்ளிகளிலும் தேர்வு முடிவுகள் அறிவிப்பு பலகையின் மூலம் அறிவிக்கப்படும்.    மாணவர்களும் பெற்றோர்களும் ஆவலுடன் முடிவை எதிர்நோக்கி உள்ளனர்.