தட்கல் முறையில் இந்த ஆண்டும் 10 ஆயிரம் மின் இணைப்புகள்: அமைச்சர் தங்கமணி

சென்னை:

ந்த ஆண்டும்  தட்கல் முறையில் 10 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என்றும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தமிழக மின்துறை  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற பேரவை மானியக்கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று காலை சபாநாயகர் தனபால் திருக்குறள் கூறி கூட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து பேரவை கூட்டம்  நடைபெற்று வருகிறது.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர்  ராமசாமி, தட்கல் முறையில் அறிவிக்கப்பட்டு உள்ள மின் இணைப்புக்கான அரசாணை வெளியிடப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 10 ஆயிரம்  தட்கல் மின் இணைப்பு களும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த ஆண்டும் தட்கல் முறையில் 10 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்பட இருப்பதாகவும், அதற்கான அரசாணை இன்னும் ஒரு  வாரத்தில் வெளியிடப்பட்டு, ஜூலை முதல் வாரம் முதல் தட்கல் மின் இணைப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.