நாகர்கோவில்:

ன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான பொன்.ராதாகிருஷ்ணன் படம் பொறிக்கப்பட்ட 10ஆயிரம் விசிட்டிங் கார்டு அளவிலான டோக்கன் தேர்தல் பறக்கும் படையின ரால்  கைப்பற்றப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விசிட்டிங் கார்டு அளவிலான அடையாள அட்டையானது,  வாக்காளர்களுக்கு பரிசு வழங்கும் வகையில்   தயாரிக்கப்பட்ட டோக்கனாக இருக்கலாம் என்று சந்தேகிகப்படுகிறது.

கன்னியாகுமரி தொகுதியில், அதிமுக கூட்டணி சார்பாக பாஜகவை சேர்ந்த சிட்டிங் எம்.பி.யும் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எச்.வசந்தகுமார் போட்டியிடுகிறார். இருவருக்கும் இடையே அங்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட பொன்னார் படம் பொறித்த டோக்கன் போன்ற கார்டு

இநத் நிலையில்,  கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு அருகே பெரியவிளை, மடத்துவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகரன். என்பவரின் சொகுசு  காரை மடக்கி சோதனையிட்ட தேர்தல் அதிகாரிகள் அதனுள் இருந்த அட்டை பெட்டியில், சுமார் 10ஆயிரம் விசிட்டிங் கார்டு அளவிலான அட்டை இருந்ததை கண்டனர். அந்த அட்டையில் பாஜக வேட்பாளரான பொன்.ராதாகிருஷ்ணன்  உடன் தாமரை சின்னம் படம் பொறிக்கப்பட்டிருந்தது. அதில், வாக்களிப்பீர் தாமரைக்கே என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.

அந்த கார்டு அச்சடிக்கப்பட்ட பிரின்டிங் பிரஸ் குறித்த விவரங்கள் இல்லை. மேலும், அதுபோல தேர்தல் பிரசார அட்டையை எடுத்துச்செல்ல காருக்கு அனுமதி வாங்கப்படவும் இல்லை எனத் தெரியவந்தது. இந்த கார் அந்த பகுதியை சேர்ந்த பாமக நிர்வாகியின் கார் என்று கூறப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட பாமக நிர்வாகியின் கார்

இதையடுத்து, கார் மற்றும் அடையாள அட்டையை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றி நேசமணி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தேர்தல் நெருக்கி வரும் நிலையில், தாமரைக்கு வாக்களிக்கும் வகையில் வாக்காளர்களுக்கு, பரிசு பொருட்களோ அல்லது பணமோ வழங்குவதற்கு ஏதுவாக டோக்கன் கொடுக்க பிரிண்ட் செய்யப் பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.