Random image

ஆட்சியை கலைக்க திட்டமா? “தமிழகத்தில் 10ஆயிரம் பயங்கரவாதிகள்”: சுப்பிரமணியசாமி

சென்னை:

மிழகத்தில் 10 ஆயிரம் பயங்கரவாதிகள் இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கூறி உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக ஆட்சியை கலைக்க பாஜக திட்டமிட்டு இதுபோன்ற தகவல்களை பரப்பி வருகிறதா? என தமிழக மக்ளிடையே கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இதுபோன்ற தகவல்களை தொடர்ந்து கூறி வரும் நிலையில், தற்போது  சுப்பிரமணிய சாமி கூறியிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணிய சாமி,  தமிழகத்தில் தீவிரவாதிகள் இருப்பதாகவும், அவர்கள் மூளைச்சலவை செய்வதால்தான் போராட்டங்கள் வன்முறையாக மாறி வருவதாக கூறி உள்ளார்.

தமிழகத்தில் ஒரு தீவிரவாதி கூட இல்லை என்ற முதல்வரின் கருத்தை தான் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்று கூறிய சாமி,  தமிழகத்தில் துப்பாக்கி வைத்து கொலை செய்யும் கூட்டமும், பிரவுன் சுகர் விற்கும் பயங்கரவாதிகள் நடமாட்டமும் அதிகரித்து வருவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

என்னுடைய கணக்குப்படி  தமிழகத்தில் சுமார் 10 ஆயிரம் தீவிரவாதிகள் இருப்பதாகவும், அவர்களை தமிழக அரசு  இரும்புக்கரம் கொண்டு அவர்களை அடக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

சாமியின் இந்த பேட்டி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஏற்கனவே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடர்ந்து இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசி வரும் நிலையில், தற்போது சுப்பிரமணியசாமி கூறியிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஏற்கனவே இரண்டு முறை தமிழக விஜயம் செய்ய முயற்சி மேற்கொண்டு, அதை நிறைவேறாத நிலையில், தற்போது நாளை மறுதினம் மீண்டும் தமிழகம் வர இருக்கிறார்.

அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில்  பங்கேற்கும் ஊடக துறையினர்களுக்கு ஆதார் கார்டு தகவல்களை தமிழக பாஜக தலைமை  கேட்டிருப்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வரும் நிலையில், தற்போது சுப்பிரமணியசாமி தமிழகத்தில் 10ஆயிரம்  பயங்கரவாதிகள் இருப்பதாக கூறியிருப்பது மேலும் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது.

தமிழகத்தில் பாஜக காலுன்றும் முயற்சியாக, தமிழக அரசை  கலைக்க ஏதோ மறைமுகமான சித்து விளையாட்டில் பாரதியஜனதா கட்சி  இறங்கி இருப்பதாக சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு  வருகிறது.

பயங்கரவாதிகள் என்ற போர்வையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை ஏற்படுத்தி, ஆட்சியை கலைத்துவிட்டு, கவர்னரை வைத்து பாஜக ஆட்சியை நடத்தலாம் என்ற ஆசையின் காரண மாகவே இதுபோன்ற வதந்திகளை பாஜக தலைவர்கள் தொடர்ந்து பரப்பி வருவதாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நேர்மையாக ஒரு இடத்தைகூட பிடிக்க முடியாத பாரதியஜனதா கட்சி,  தமிழக ஆட்சியை கலைக்க  திட்டமிட்டு இதுபோன்ற தகவல்களை பாஜக பரப்பி வருகிறதா? என தமிழக மக்ளிடையே கேள்வி எழுந்துள்ளது.