10ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்: குப்பைகள் அள்ளுவதை தனியாருக்கு தாரை வார்க்கும் சென்னை மாநகராட்சி

சென்னை:

சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் துப்புறவு பணிகளை தனியாருக்கு தாரை வார்க்க தமிழக அரசு முடிவு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும்  27 -ம் தேதி துப்பரவு பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளனர்.

சென்னையில் மாநகராட்சி துப்புறவு பணியாளர்கள் துப்புறவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது ஓனிக்ஸ் என்னும் தனியார் வெளிநாட்டு குப்பை அள்ளும் நிறுவனத்துக்கு காண்டிராக்ட் கொடுக்கப்பட்டது. அப்போது சென்னை பிரச்சினைகளை சந்தித்து வந்த நிலையில், அடுத்த வந்த ஆட்சி, இந்த ஒப்பந்தத்த நீட்டிப்பு செய்ய மறுத்து விட்டது.

இதைத்தொடர்ந்து மீண்டும் சென்னை மாநகராட்சியே துப்புறவு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தறபோது அதிமுக அரசு  சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணிகளை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக 1546 கோடி ரூபாயில் மாநகராட்சி நிர்வாகம் ஆன்லைன் டெண்டர் கோரி உள்ளது.

இந்த நிலையில்,  துப்புறவு பணி தனியார்மயமாக்கப்படுவதைக் கண்டித்து துப்புரவு பணியாளர்கள் வரும் 27 -ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். சென்னை மாநகராட்சி துப்புறவு பணி தனியார்மயமாக்கப்படுவதால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக மாநகராட்சி தொழிலாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.