விசாரணைக்காக பொதுமக்களை சித்திரவதை செய்யும் போலிசாருக்கு ஜெயில்

டில்லி

விசாரணை செய்வதகாகக் கூறி பொதுமக்களை சித்திரவதை செய்யும் போலிசார் உட்பட அரசு ஊழியர்களுக்கு சிறை தண்டனை வழங்கக் கோரி மசோதா அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற குளிர்காலத் தொடரில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ்  கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் விஜய் சாய் ரெட்டி ஒரு தனிநபர் மசோதாவை அறிமுகப் படுத்தினார்.    அந்த மசோதாவில் மேற்சொன்ன தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், “தகவல்களைப் பெறுவதற்காக பொதுமக்களை போலீசார் உட்பட அனைத்து அரசு ஊழியர்களும் சித்திரவதை செய்கின்றனர்.   இது தண்டனைக்குரிய குற்றமாகும்.   இவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட வேண்டும்.    இதில் போலீசாரும் சேர்க்கப் பட வேண்டும்.   இதற்காக குறைந்த பட்சமாக 3 வருடங்கள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட வேண்டும்.   அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படவேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

You may have missed