இந்தஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்படக்காரர் விருது பெற்ற 10வயது இந்திய சிறுவன்

ந்தஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்படக்காரர் விருது இந்தியாவை சேர்ந்த 10வயது பஞ்சாப் சிறுவனுக்கு கிடைத்துள்ளது.

10வயதேயான அர்ஸ்தீப் சிங் என்ற சிறுவன் 2018ம் ஆண்டுக்கான சிறந்த வனவிலங்கு புகைப்பட கலைஞர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

தற்போது 10 வயதை எட்டியுள்ள அர்ஸ்தீப் சிங், புகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர் என்றும், தனது 6 வயதி லேயே தனது தந்தை ரன்தீங் சிங்குடன் பயணம் மேற்கொள்ளும்படி புகைப்படம் எடுப்பார் என்றும் அவரது தந்தை பெருமிதமாக கூறி உள்ளார்.

இந்த நிலையில், பிரிட்டனின் நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியத்தின் சிறந்த வருடாந்திர 53வது வனவிலங்கு புகைப்பட  போட்டிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில்,   10வயது கீழ் உள்ளவர்களுக்கான புகைப்படை கலைஞர்க்ள போட்டியில் பங்குபெற்ற  அர்ஸ்தீப் சிங் தான் எடுத்திருந்த பல்வேறு புகைப்படங்களை தேர்வு கமிட்டிக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்த போட்டியில், அர்ஸ்தீப் சிங்கை  சிறந்த புகைப்பட கலைஞராக கமிட்டி தேர்வு செய்துள்ளது அவர் எடுத்த புகைப்படமான குழாயுக்குள் இரண்டு ஆந்தைகள் அமர்ந்துள்ள புகைப்படம் சிறந்த புகைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த விருது பெற்ற புகைப்படத்தை, அர்ஸ்தீப் சிங் தனது தந்தையுடன் உடன் பஞ்சாபில் உள்ள கபூர்தலா பகுதிக்கு சென்றிருந்தபோது, அங்கிருந்த தேவைற்ற இரும்பு குழாய்க்குள் வசித்து வந்த இரண்டு ஆந்தைகளை கண்டு, அதை புகைப்பபடம் எடுத்ததாக கூறப்படுகிறது.

அர்ஸ்தீப் சிங் ஏற்கனவே இந்தஆண்டுக்கான  ஜூனியர் ஆசிய வனவிலங்கு புகைப்படக்காரர் விருதை பெற்றுள்ளார். அவர் எடுத்த புகைப்படங்கள் புகழ்பெற்ற உலக பத்திரிகைகளான,  லோன்லி பிளானெட் பிரிட்டன், லோன்லி பிளானட் ஜெர்ம்னி, லோன்லி பிளானெட் இந்தியா, பிபிசி வனவிலங்கு இங்கிலாந்து போன்ற சர்வதேச பிரசுரங்களில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.