கோலாலம்பூர்:

லேசியாவில் ஊடகங்களில், சமூக வலைதளங்களில் பொய் செய்திகளை வெளியிடும் நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில்  புதிய மசோதா, மலேசிய பாராளுமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு ஊடகங்கள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

மலேசியாவில் பிரதமர் நஜீப் ரசாக் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. அங்கு தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத்தில், ஊடகங்களில் பொய் செய்திகள் வெளியிடுவதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதா சமீபத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் ஆனது. அந்த மசோதாவில், மலேசியாவில் பொய்யான செய்திகளை ஊடகங்களிலும்,  சமூக ஊடகங்களிலும் வெளியிடுவதை தடுக்கும் வகையில், பொய்யான செய்திகளை வெளியிடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் புதிய மசோதா மலேசிய பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது

பொய்யான செய்திகளை வெளியிடும் நபர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பொயயான செய்தி என்பது செய்தி, தகவல், அறிக்கை, ஆடீயோ, வீடியோ எதுவாக இருந்தாலும் இந்த சட்டத்தின்மூலம் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெளிநாட்டினருக்கும் பொருந்தும் என்றும், அவர்கள் வெளியிடும் செய்தி மலேசிய நாட்டினை பாதிக்கும் வகையில் இருந்தால், அவர்களும் இந்த சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மலேசியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மசோதாவுக்கு மலேசிய எதிர்க்கட்சியினர், ஊடகங்கள்  கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் மலேசிய அரசோ, இந்த சட்டத்தின் மூலம் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்றும், ஊடகங்களும், பொதுமக்ளும் இனிமேல் மிகுந்த கவனத்துடனும், பொறுப்புடனும் செய்திகளை பதிவிடுவார்கள் என்றும் தெரிவித்து  உள்ளது.

இதுபோன்ற சட்டங்கள் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படுமா?