துப்பாக்கி -2 படம் விஜய்க்கு 100 கோடி?

’பிகில்’ படத்துக்கு 60 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய விஜய் ‘மாஸ்டர்’ படத்துக்கு 80 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.

விஜயின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளார்.

விஜய்- முருகதாஸ் கூட்டணியில் உருவாகி பெரும் வெற்றி அடைந்த ‘துப்பாக்கி ‘படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகும் இந்த படத்தில் நடிக்க விஜய்க்கு 100 கோடி ரூபாய் ஊதியம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

விஜயுடன் காஜல் ஜோடி சேரும் 4 –வது படம் இது.

இந்த ஜோடி ஏற்கனவே துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தது.

’இந்தியன் -2’ படத்தில் கமலஹாசனுடன் இணைந்து நடிக்கும் காஜல், பிருந்தா இயக்குநராக அறிமுகமாகும் ‘ஹே சினாமிகா’ படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 100 crore salary to Vijay for Thuppaki2 film
-=-