டெல்லி:

டுத்த 5ஆண்டுகளில் ரயில்வே பாதைகள் 100 சதவிகிதம் மின்மயமாக்கப்பட்டு விடும் என்று மத்திய ரயில்வேஅமைச்சர் பியூஸ் கோயல்  கூறினார்.

தலைநகர் டெல்லியில், 8-ஆவது உலக ஆற்றல் கொள்கை உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் மத்திய ரயில்வே துறை அமைச்சா் பியூஷ் கோயல்  கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது,  இந்திய ரயில்வே துறை வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியாவில் ஏற்கெனவே 55 சதவீத ரயில்கள் மின்சாரம் மூலம் இயக்கப்படுகின்றன. அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் இது 100 சதவீதமாக உயரும், அதற்கான மேம்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று கூறினார்.

இந்தசாதனை மூலம், இதன் மூலம் இந்திய ரயில்வே துறை, மின்சாரம் மூலம் இயங்கக்கூடிய உலகின் மிகப்பெரிய ரயில்வே துறை களில் ஒன்றாக மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தவர், தங்கள் ரயில்வே துறையையும் எவ்வாறு முழுவதும் மின்சாரமயமாக்குவது என்பதை பிற நாடுகள் சிந்திப்பதற்கு, இந்த நடவடிக்கை ஒரு செய்தியாக அமையும் என்று கூறினார்.

ஆற்றல் துறையில் முதலீடுகளை அதிகரிக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கூறியவர்,  2030-ஆம் ஆண்டுக்குள், இந்திய ரயில்வே துறை 20 ஜிகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தியில் முதலீடு செய்ய உள்ளதாகவும்,  சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் வாயுக்கள் வெளியேற்றத்தை குறைக்கும் தனது கடமையில் இந்தியா விழிப்புடன் உள்ளது என்று கூறினார்.

மின்சார பல்புகளில் இருந்து எல்இடி பல்புகளுக்கு மாறியது, ஆண்டுதோறும் 8 கோடி டன் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க உதவியுள்ளது என்று தெரிவித்தவர்,  விறகுகளை பயன்படுத்தி சமையல் செய்யும் பழைய முறைக்கு விடைகொடுத்து எரிவாயு பயன்பாட்டுக்கு மாறியது, . கடந்த 6 ஆண்டுகளாக நிலக்கரி மின் நிலையம் தொடங்க, இந்தியாவில் ஒப்புதல் வழங்கப்படவில்லை போன்ற  அரசின் திட்டங்கள் சுற்றுச்சூழல் மாசை குறைக்க கணிசமாக பங்களித்துள்ளது உள்ளது  இதேபோல் ‘தூய்மை இந்தியா’ திட்டமும் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பதில் பெரும் பங்கு வகித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.