ஜியோமி மொபைல் வாங்கினால் 100 GB டேட்டா! ஜியோ சலுகை

தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து அதிரடியான சலுகைகளை வழங்கி தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து வருகிறது.

ஜியோ அறிமுகமான போது 3 மாதம் இலவசம் என்று தொடங்கி, தற்போது வரை பல்வேறு சலுகைகளை வழங்கி நாட்டின் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.

ஏற்கனவே கடந்த வருடம்  செப்டம்பர் மாதம்  ரிலையன்ஸ்  ஜியோ நிறுவனம்  ஜியோமி நிறுவனத்துடன்  இணைந்து குறிப்பிட்ட ஜியோமி மொபைல் வாங்குகிற புதிய  வாடிக்கையாளர்களுக்கு 30GB இலவச டேட்டாவை  வழங்கியது.

இந்நிலையில், தற்போது ஜியோமி நிறுவனம்  MI MAX 2 என்ற புதிய மொபைலை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த மொபைல் போன் வாங்குபவர்களுக்கு, சிறப்புச்சலுகையாக 100GB  இலவச டேட்டாவை அறிவித்திருக்கிறது.

இது முன்பு வழங்கிய சலுகையை விட இது மூன்று மடங்கு அதிகம்.

ஜியோமி நிறுவனம்  தன்னுடைய மொபைல் போன்களில்  அதிக MAH திறன் கொண்ட பேட்டரியை இந்த மொபைலில்தான் அறிமுகப்படுத்தி இருக்கிறது.  MI MAX 2 மொபைலின்  பேட்டரி 5300MAH திறன் கொண்டதாக  இருக்கிறது.

4GB RAM, 6.44 INCH DISPLAY போன்றவற்றை அடிப்படையாக  கொண்ட மொபைலின் விலை ரூ.16,999.

ஏற்கெனவே ரிலையன்ஸ் ஜியோ  நிறுவனம் மற்ற மொபைல் நிறுவனங்களுடன் இணைந்து பல சலுகைகளை வழங்கி வருகிறது.