தமிழகத்தில் 100 அரசு சூப்பர் மார்க்கெட்: சட்டசபையில் அமைச்சர் செல்லூர் ராஜு தகவல்

சென்னை:

மிழகத்தில் மக்களின் தேவையை கருதி மேலும் 100 பல்பொருள் அங்காடிகள் (சூப்பர் மார்க்கெட்) திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.

தமிழக சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்கள் தமிழகத்தில் அரசு சார்பில் சூப்பர் மார்க்கெட் திறக்கப்படுமா என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்து பேசிய தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஏழை எளிய மக்கள் மற்றும் கிராமபுற மக்கள்  பயன்பெறும் வகையில்  தமிழகத்தில் 100 பல்பொருள் அங்காடிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த பல்பொருள் அங்காடியில் 300 வகையான பொருட்கள் இடம்பெறும் என்றும் அமைச்சர் கூறினார்.