இம்பால்:

2022ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய அரசு இலக்கு நிர்ணடியத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவத்துள்ளார்.

மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் 105வது இந்திய அறிவியல் மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது, கடந்த 14ந்தேதி மறைந்த  ஸ்டீபன் ஹாகிங்கின் மறைவுக்கு மாநாட்டில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்தபேசிய  பிரதமர் மோடி,  ஹாகிங் இந்தியாவின் நண்பராக இருந்தார். அவர் தனது முயற்சிகளை பாராட்டினார், உலகின் மிகப்பெரிய உந்துதல்களில் ஒன்றாக அவர் நினைவுகூறப்படுவார் என்று கூறினார்.

மேலும, நாட்டில் 2022ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய அரசு இலக்கு நிர்ண யித்துள்ளதாக  கூறினார். இதை எட்டுவதற்கு அறிவியலாளர்கள் துணை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நாட்டில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கி வருவதாக கூறிய அவர், புதிய வேலைவாய்ப்புகள் மூலம் 2,000 வேலைகள் உருவாக்கப்படும் என்று கூறினார்.

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களின் சக்தி எப்போதுமே நாட்டின் உத்வேகத்தை அளிப்பதாககூறினார்.  ராணி கெய்டின்லியுவின் பெரிய புரட்சிகர மகள் மற்றும் மகளுக்கு வணக்கம் தெரிப்பதாகவும் பேசினார்.

மேலும், அறிவியல் ஆய்வை விரிவுபடுத்தும் வகையில் அறிவியலாளர்கள் ஆய்வகங்களில் இருந்து கள ஆய்வுக்கு வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு அவர் பேசினார்.