10ம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி: ஆக.17 முதல் மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா முடக்கம் காரணமாக, 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப் பட்ட நிலையில், தேர்வுமுடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில்  100% மாணவ-மாணவி கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வரும் 17ந்தேதி முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியல் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இன்று இணையதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் சென்று தங்களுடைய மதிப்பெண் விவரங்களை உள்ளிட்டு, தெரிந்துக் கொள்ளலாம்.

You may have missed