ஆயில் டேங்கர் லாரி வெடித்து 100 பேர் பலி “ பாகிஸ்தான்

ராவல்பிண்டி

பாகிஸ்தானில்  பழுதாகி நின்ற ஆயில் டேங்கர் லாரி வெடித்து, எண்ணெய் எடுக்க வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர்  இறந்தனர்.

பாகிஸ்தானில் எண்ணெய் ஏற்றிச் சென்ற ஆயில் டேங்கர் லாரி நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றது.  அக்கம்பக்கம் உள்ளோர் அதில் உள்ள எண்ணெய் யை எடுத்துச் செல்ல போட்டுப் போட்டு வந்து பிடித்துச் சென்றனர்.  கூட்டம் அளவுக்கு மீறியது.  திடீரென லாரி வெடித்து கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

தப்பிக்க முடியாத அளவுக்க்கு தீ பரவியதால் எண்ணெய் பிடிக்க வந்த பலரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.    நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.   பலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   மரணம் அடைந்தவர்களின் உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகி உள்ளது.