திருவனந்தபுரம்

கேரளாவில் குடிக்காததால் 100 பேருடைய மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது

கொரோனா நோயாளிகளுக்குத் தனி மருத்துவமனைகளை ஏற்படுத்தியுள்ள கேரள அரசு, குடிகாரர்கள் மறுவாழ்வுக்கும் புதிய மையங்களை திறந்துள்ளது.

கேரளாவில் இதற்கு முன்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் மது விலக்கு அமல் படுத்தப்பட்டிருந்தாலும், முழுமையாக மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருப்பது இப்போது தான் முதன் முறை.

கொரோனாவை கட்டுப்படுத்த, நாடு தழுவிய ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளதால்- கேரளாவில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டு 5 நாட்கள் ஆகின்றன.

மது அருந்தமுடியாமல்,மன அழுத்தம் அடைந்த 5 பேர் அங்குத்  தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மேலும் சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சாப்பிடுவது போல் தினமும் மூன்று வேளை மது அருந்தி வந்த குடிமகன்கள், மது அருந்தாததால், கிட்டத்தட்டப் பைத்தியம் போல் ஆகி விட்டார்கள்.

நேற்று ஒரே நாளில் மட்டும் அங்கு 100க்கும் மேற்பட்டோர், மனநிலை பிறழ்ந்துள்ளதாகக் கண்டறியப்பட்டு, மன நோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது தவிர மேலும் பலர் சிகிச்சை பெற வசதியாக –அங்குள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மது மறுவாழ்வு மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

– ஏழுமலை வெங்கடேசன்