ற்போது குழம்புக்கு போடும் சின்ன வெங்காயம் கிலோ 100 ரூபாய் அளவுக்கு விலை ஏறிவிட்டது. தக்காளி கிலோ 80 ரூபாய் வரை விற்கிறது.

குழம்பு மற்றும் சாம்பாருக்கு அடிப்படைத் தேவையான வெங்காயம், தக்காளியின் விலை இப்படி ஏகத்துக்கு உயர்ந்திருப்பதை அடுத்து குடும்பத் தலைவிகள் – தலைவர்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.

அவர்களுக்கு உதவும்படியாக, வெங்காயம், தக்காளி இல்லாமல் குழம்பு வைக்கும் முறை இதோ:

தேவையான பொருட்கள்..

• துவரம்பருப்பு – 1/4 கப் • செளசெள – 1 • சாம்பார் பொடி – 3 தேக்கரண்டி • புளி – நெல்லிக்காய் அளவு • பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி • உப்பு – தேவையான அளவு • கறிவேப்பிலை – 1/2 கொத்து • கொத்தமல்லி – 1/2 கொத்து • தாளிக்க: • கடுகு – 1/2 தேக்கரண்டி • உளுத்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி • வெந்தயம் – 1/2 தேக்கரண்டி • எண்ணெய் – ஒரு மேசைகரண்டி

செய்வது எப்படி? •

துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவையுங்கள். • சௌசௌவை தோல், விதை நீக்கி துண்டுகளாக நறுக்குங்கள். • பருப்பில் சௌசௌ,சாம்பார் பொடி, பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வேகவிட்டு புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி சேருங்கள்.

புளி பச்சை வாசனை போக கொதித்த பிறகு, தாளிக்கும் பொருட்களை தாளித்து சேர்த்து, கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து இறக்குங்கள். விலைவாசியை குறைக்க முடியாவிட்டாலும்,

ஏதோ மக்களுக்கு நம்மாலான உதவி