ஹைதரபாத்தில் 100 நாய்களுக்கு விஷம் வைத்து கொள்ளப்பட்ட அதிர்ச்சி சம்பவம்

ஹைதராபாத்தின் அருகே நூறு நாய்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டதாக புகார் வந்த நிலையில் விலங்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

dogs

ஹைதராபாத்தின் கட்கேசார் பகுதியில் 100 நாய்கள் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நாய்கள் கொல்லப்பட்டது குறித்து சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரின் விலங்குகள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ப்பட்டது.

நாய்கள் கொல்லப்பட்டது குறித்து புகார் அளித்த மனித உரிமை ஆர்வலர் ப்ரவாலிகா கூறும்போது, “ நாய்களைக் கொல்ல ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து ஆட்கள் பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களை டவுன்ஷிப் குழு உறுப்பினர்கள் அழைத்து வந்துள்ளனர். விஷ ஊசி மூலம் நாய்கள் கொல்லப்பட்டுள்ளன. இந்த செய்தி வெளியே பரவும் முன்பு குப்பை வண்டிகள் மூலம் நாய்களின் உடல்கள் அகற்றப்பட்டுள்ளன.

டவுன்ஷிப் ஆட்களுக்கு ஆதரவாக இருக்கும் காவல்துறையினர் இந்த சம்பவத்தை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர். இது குறித்து புகார் அளித்தால் குற்றவாளிகள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய காவல்துறையினர் மறுக்கின்றனர் “ என்றார்.

இந்த புகார் குறித்து காவல்துறை தரப்பில், ”இன்போசிஸ் அலுவலகம் அருகே உள்ளூர் மக்களால் 100 தெரு நாய்கள் விஷம் கொடுத்துக் கொலை செய்யப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது நாய்களின் உடல்கள் எதுவும் கிடைக்கவில்லை. புகார் தொடர்பக விசாரணை நடத்தி வருகிறோம். குற்றச்சாட்டு உண்மையானால் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் “ என்று தெரிவிக்கப்பட்டது.