சென்னை:
மிழகத்தில் பேட்டரியால் இயங்கக்கூடிய வாகனங்களுக்கு 100% வரி விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பேட்டரி மூலம் இயங்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 100% வரி விலக்கு வழங்கிப் பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே 50% வரிச்சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 100% விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்த அரசாணையில், 2022-ம் ஆண்டு இறுதி வரை 100% வரி விலக்குடன் பேட்டரியால் இயங்கும் வாகனங்களை வாங்கி பொதுமக்கள் பயன்பெறலாம் எனவும் அறிவித்துள்ளது.