minnn_2866319f
”100 யூனிட் மின்சாரம் இலவசம்” என்று தனது தேர்தல் அறிக்கையில் கூறியதை செயல்படுத்த உத்தரவிட்டிருப்பதாக கூறுகிறது அ.தி.மு.க. அரசு.  இது எந்த அளவுக்கு சாத்தியம்.. உண்மை?
100 யூனிட் என்பது 2 மாதங்களுக்கு என்ற நிபந்தனையின் பேரில் அமலாகியிருக்கிறது. அப்படியானால், மாதம் ஒன்றுக்கு 50 யூனிட் வரை இலவசமாக பயன்படுத்தலாம். அதற்கும் மேலாக 1 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தினால்கூட, இலவசம் என்ற சலுகை கிடையாது.
ஆனால் எதார்த்தம் என்ன?
சாதாரணமாக இரண்டு ட்யூப் லைட்கள், இரண்டு மின்விசிறிகள் பயன்படுத்தினாலே  நாள் ஒன்றுக்கு ஒன்றரை யூனிட் செலவாகும். ஆக, சாதாரணமாகவே மாதம் ஒன்றுக்கு 45 யூனிட்களும், இரண்டு மாதங்களுக்கு 90 யூனிட்களும் ஆகிவிடும்.
இவைதவிர கூடுதலாக ஏதாவது ஒரு மின் சாதனத்தை…  கனிணி, ப்ரிட்ஜ்.. இப்படி  பயன்படுத்தினால், 100 யூனிட்களை தாண்டிவிடும்.  குறிப்பாக கடந்த கால அரசே டிவி கொடுத்திருக்கிறது. இப்போதைய அரசு முந்தைய ஆட்சியில் மிக்ஸி கிரைண்டர் கொடுத்திருக்கிறது.
ஆக, நிச்சயமாக 100 யூனிட்டுகளுக்கு மேல்தான் ஆகும். ஆகவே இந்த இலவச அறிப்பினால் பயன்பெறப்போவது யாரும் இல்லை என்பதே உண்மை.
(வாட்ஸ்அப்)