சென்னை:

பிரபல சாமியார் கல்கி பகவானிடம் இருந்து  1000 ஏக்கர் நிலம் ஆவனங்கள், ரூ 33 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக  வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.

சென்னை ஆந்திர பார்டரில் அமைந்துள்ள பிரபலமான கல்கி பகவான் ஆசிரமம்.  இந்த ஆசிரமத்துக்கு சொந்த மான இடங்கள் பல இடங்களில் உள்ளது. இந்த நிலையில், நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான பல்வேறு இடங்களில்  சோதனை மேற்கொண்டனர்.

இதில், ரூ.33 கோடி கணக்கில் வராத பணம் மற்றும் ரூ.1000 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டதற்கான பத்திரங்கள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  தொடர்ந்து இன்று 2வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

கல்கி ஆசிரமத்துக்கு இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் கிளைகள் உள்ளன. ஆந்திராவில்  தலைமை ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்துக்கு சென்னையிலும் 20 கிளைகள் உள்ளன. இந்த ஆசிரமத்தை விஜயகுமார் என்பவர் நிறுவி ஆன்மிக பணிகளை செய்து வருகிறார். கல்வி ஆசிரமங்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்கிறார்கள்.

இந்த ஆசிரமத்தில் பக்தர்களுக்கு போதைப்பொருட்கள் வழங்கப்பட்டதாகவும், வசூல் வேட்டை நடத்துவதாகவும் புகார்கள் எழுந்தன. அதுபோல இந்த ஆசிரமத்துக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களிலும் வரி ஏய்ப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வருமான வரித்துறை நேற்று காலை முதல் ஒரே நேரத்தில் கல்வி ஆசிரமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

ஆந்திர மாநிலம், கோவர்த்தனபுரம் கல்கி ஆசிரமம், தெலுங்கானாவில் உள்ள ஆசிரமம் மற்றும் என்.கோபி கிருஷ்ணாவின் தொழில் நிறுவனங்கள் மற்றும் சென்னையில் ஆயிரம் விளக்கு,  திருவள்ளூர் நேமத்தில் உள்ள ஆசிரமம் போன்றவற்றில் சோதனை நடைபெற்றது. விடிய விடிய நடைபெற்ற இந்த சோதனையில் 33 கோடி ரொக்கப்பம் பணம் மற்றும் ஏராளமான நில ஆவனங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இன்று 2வது நாளாக சோதனை நீடித்து வருகிறது. கைப்பற்றப்பட்ட சுமார் 1000 ஏக்கர் நிலம் தொடர்பான ஆவனங்கள், வெளிநாடுகளில் முதலீடூ மற்றும் கல்வி நிறுவனங்களில் நடந்த வரி ஏய்ப்பு குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும்,  இதில், வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து சோதனை நீடித்து வருவதால் கல்கி பகவான் பக்தர்களிடையே சோகம் ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் சாமியார் என்ற போர்வையில் அமர்ந்து கொண்டு நாட்டையும் மக்களையும் ஏமாற்றி வரும் இதுபோன்ற பலே சாமியார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இன்றைய சோதனையில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.