Random image

பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்ய 1000 நவீன ஜெர்மன் வாகனங்கள்: செங்கோட்டையன்!

ஈரோடு:

ரசு பள்ளிகளில் உள்ள கழிவறைகளை  சுத்தம் செய்யும் வகையில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த 1000 நவீன ‘ வாகனங்கள் வர இருப்பதாகவும், தமிழகத்தில் மேலும் 3000 ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும் என்றும்  தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தமிழக கல்வித்துறையில் அதிரடியாக பல்வேறு அறிவிப்புகளையும், மாற்றங்களையும் செய்து வரும் செங்கோட்டையன், இன்று  ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பாரியூர் வெள்ளாள பாளையம் தொடக்கப் பள்ளியில்  ‘‘ஸ்மார்ட் கிளாஸ்’’ வகுப்பை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்,  தமிழக கல்வித்துறையில் மாணவ – மாணவிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், பள்ளிகளில் உள்ள கழிவறைகளை செய்யும் வகையில், ஜெர்மனி நாட்டில் இருந்து ரோட்டரி சங்கம் சார்பில் வாங்கப்பட்டுள்ள  1000 வாகனங்கள் தமிழகம் வருகிறது என்று கூறினார்.

இந்த வாகனங்களை கொண்டு, பள்ளிகளின் கழிவறைகளை சுத்தம் செய்யப்பட இருப்பதாக வும், முதல்கட்டமாக தமிழகத்தில் 20ஆயிரம் பள்ளிக்கூடங்களில் இந்த வாகனங்கள் மூலம் சுத்தம் செய்யப்படும் என்றும் கூறினார்.

இந்த சேவை முதன்முதலாக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், அரசு பள்ளிகளில் 3,000 ஸ்மார்ட் வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் என்றும்,  ஸ்மார்கிளாஸ் திட்டம் மூலம், வரும் காலங்களில் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.