துபாய்: டி-20 கிரிக்கெட் வரலாற்றில் மொத்தம் 1000 சிக்ஸர்களை விளாசிய முதல் சாதனையாளராக மாறியுள்ளார் கிறிஸ் கெய்ல்.
இந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணிக்காக ஆடிவருகிறார் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த கிறிஸ் கெய்ல். இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மொத்தம் 8 சிக்ஸர்களை பறக்க வைத்தார் கெய்ல். இதன்மூலம், டி-20 கிரிக்கெட் வரலாற்றில் மொத்தமாக 1000 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
இவர் பொதுவாக அதிரடி ஆட்டக்காரர். சிங்கிள் ரன்களை ஓடி எடுப்பதில் ஆர்வமில்லாதவர். இவரது ஸ்டைலே அதிரடி சிக்ஸர்கள்தான். இவருக்கு ‘யுனிவர்ஸ் பாஸ்’ என்ற செல்லப் பெயருண்டு.
இவருக்கடுத்து டி-20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்திருப்பவர் அதே வெஸ்ட் இண்டீஸ் அணியின் பொல்லார்டு. ஆனால், கெய்லுடன் ஒப்பிடுகையில் மிக அதிக வித்தியாசம் உண்டு இவருக்கு. இவரது சிக்ஸர்களின் எண்ணிக்கை 690 மட்டுமே.
நான்காமிடத்தில் 485 சிக்ஸர்களுடன் இருப்பவர் பிரண்டன் மெக்கெல்லம். 467 சிக்ஸர்களுடன் நான்காமிடத்தில் இருப்பவர் ஷேன் வாட்சன் மற்றும் ஐந்தாமிடத்தில் 447 சிக்ஸர்களுடன் இருப்பவர் ஆண்ட்ரே ரஸ்ஸல்.
தற்போது 41 வயதாகும் கெய்ல், இன்னும் இரண்டு சீசன்களுக்கு ஐபிஎல் ஆடினால், கதையே வேறாக மாறிவிடும் என்பது நிச்சயம்!