கேரளா வெள்ளம்: நெல்லையில் தயாராகிறது 10,000 சப்பாத்தி

நெல்லை:

கேரளாவில் வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. பல மாநில அரசுகள் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வருகின்றன.

இதில் பிஸ்கட், ரொட்டி முக்கிய இடம் பிடித்துள்ளன. இந்த வகையில் நெல்லை கொக்கிரகுளம் கிராமத்தில் இருந்து கேரளா கொண்டு செல்ல 10ஆயிரம் சப்பாத்திகள் தயாராகி வருகிறது.

கிராம மக்கள், மாணவ, மாணவிகள் சப்பாத்தி தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.