தாகா:

தீவிரவாதத்திற்கு எதிராக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மதகுருமார்கள், சாமியார்கள் கலந்துகொண்ட பேரணி பங்களாதேஷ் தலைநகர் தாகாவில் நடந்தது. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதத்திற்கு எதிராக இப்பேரணி அங்கு எழுச்சியுடன் நடந்தது.

பங்களாதேஷில் இஸ்லாம் பெயரில் வன்முறையை தூண்டி ஆட்சியை பிடிக்கும் முயற்சிக்கு எதிராக இந்த பேரணி நடத்தப்பட்டது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். பங்களாதேஷ் பாதுகாப்பு படையினர் மீது தற்கொலை படை தாக்குதல் நடந்ததை தொடர்ந்து அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு 24 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பேரணியில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் பிரதமர் ஷேக் ஹசீனா உரையற்றினார். இதுல் சவுதி அரேபியாதைவ சேர்ந்த 2 மூத்த மதகுருமார்கள் தீவிரவாதத்திற்கு எதிராக சொற்பொழிவாற்றினர். மெக்காவை சேர்ந்த மூத்த மதகுருமார் சேக் முகமது பின் நசீர் அல் குஜைம் கூறுகையில், ‘‘இஸ்லாமில் பயங்கரவாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் இடமில்லை. உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதத்திற்கு எதிராக திரள வேண்டும்’’ என்றார்.

பேரணியை முன்னிட்டு பூங்கா பகுதிக்கு செல்லும் முக்கிய சாலைகளை தாகா போலீசார் அடைத்துவிட்டனர். மேலும், முக்கிய வணிக வளாகங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்கவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இஸ்லாமிய தீவிரவாதிகள் பங்களாதேஷூக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அரசியல் கால்புணர்ச்சி காரணமாக அரசுக்கு எதிராக தீவிரவாதம் வளர்க்கப்படுகிறது. வெளிநாட்டினர், சிறுபான்மையினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியதால், பங்களாதேஷ் ஜமாய்துல் முஜைதீன் அமைப்புக்கு ஹசீனா தலைமையிலான அரசு தடை விதித்தது.

கடந்த ஆண்டு தாகா மார்க்கெட் பகுதியில் நடந்த தாக்குதலில் 18 வெளிநாட்டினர் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு ஐஎஸ்ஐஎல் பொறுப்பேற்றது. இந்த இரட்டை குண்டுவெடிப்பை தொடர்ந்து வடகிழக்கு நகரமான சைலேத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதை ராணுவத்தினர் கண்டறிந்தனர். அங்கு நடத்தப்பட்ட தாக்குதலில் வெடி பொருட்கள் வெடித்ததில் நுண்ணறிவு பிரிவு தலைவர் காயமடைந்தார்.