வார ராசி பலன்: கணிப்பவர்: “100 பர்சென்ட் கரெக்ட்” ஜோதிட வல்லுனர் திலக்

astrology_symbol-satyam1

03.02.2016டூ 09.02.2016 தைமாதம் 20ம்தேதி புதன்கிழமை முதல் தைமாதம் 26ம்தேதி செவ்வாய்கிழமை வரை.!! ராசி பலன்கள்


தங்கள் பலன் அறிய உங்கள் ராசியின் பெயர் மீது கிளிக் செய்க !

மேசம் ராசி நேயர்களே

இந்த வாரம் உங்கள் ராசி அதிபதி ஏழாம் இடத்திலும் தனஸ்தானாதிபதி சுக்கிரன் ஒன்பதில் கோணம் பெற்றும், லாபாதிபதி சனிபகவான் சந்திரனோடு சேர்ந்து எட்டாம் இடத்தில் அமர்ந்து இருக்கும் வேளையில் இந்த வாரம் தொடங்குகிறது..!!!

வியாழன் மாலை ஆறுமணி வரை உங்களுக்கு சந்திராஷ்டமம் இருக்கிறது புதன்,வியாழன் இரண்டு நாட்களில் புது முயற்சிகளில் ஏதும் ஈடுபட வேண்டாம்.. இரு நாட்களை தவிர மற்ற நாட்கள் நன்றாக இருக்கிறது ஒன்பதில் புதன் சுக்கிரன் சாரத்திலும், சுக்கிரன் தன் சுய சாரத்திலும் இயங்குவதால் தொழில் அபரிதமான வளர்ச்சி,முன்னேற்றம் காணலாம்.!!

ஆறாம் இடத்தில் குரு இன்னும் வக்கிரகதியில்தான் இருக்கின்றார் தொழில் ரீதியாக உள்ள எதிர்ப்புகள் விலகும்.!! ஏழில் இருக்கும் செவ்வாய் உடலில் உஷ்ணம் அதிகமாகி சில பிரச்சனைகள்கொடுககலாம்.. எட்டாம் இடத்தில் சனிபகவான் இருப்பதால் யாரையும் சந்தேகத்துடனையே எதிர்கொள்வது நல்லது காரனம் நல்வர்களை நாம் கெட்டவர்களாகவும், கெட்டவர்களை நாம் நல்லவர்களாகவும் யூகிக்கும் எண்ணம் தன்னாலயே வரும் .!!

பத்தில் இருக்கும் சூரியன் தொழில் ரீதியாக அலைச்சலை கொடுக்கும் பொறுமையாக செயல்படுவது நல்லது.!!! பதினொன்றில் இருக்கும் கேது விற்கு அம்மன் வழிபாடுகள் நன்மைகள் தரும்.! இந்த வாரம் வணங்கவேண்டிய தெய்வம் மகாலட்சுமி…

இந்த வாரம் ராசியான கிழமை ஞாயிறு,திங்கள்

இந்தவாரம் ராசியான நிறம் இளம் சிவப்பு,பச்சை.!

ரிஷப ராசி நேயர்களே…!

இந்த வாரம் உங்கள் ராசிஅதிபதி எட்டாம் இடத்திலும், தனஸ்தானாதிபதியும் எட்டாம் இடத்தில் இருக்கும் வேளையில் இந்த வாரம் தொடங்குகிறது.. தொழில் ரீதியாக மட்டும் அல்ல எல்லாவற்றிலும் போராட்டத்தின் மூலமாகத்தான் உங்கள் வாழ்வில் இந்த வாரம் எல்லாம் நடக்கும், இவ்வளவு முயற்சி எடுகக வேண்டுமா என நீங்கள் அழுத்துக் கொண்டால் ஒன்றுமே நடக்காது , ஐந்தில் குரு வககிரம் ,குல தெய்வ வழிபாடு நிச்சயம் செய்ய வேண்டும்.!

ஆறாம் இடத்தில் செவ்வாய் பகவான் இருப்பதால் எதிரிகள் ஓடி ஒளிந்து கொள்வார்கள் ஏழில் இருக்கும் சனி நடபு ரீதியாகவும்,குடும்ப ரீதியாகவும் பிரிதலை உண்டாக்க முயலும் எனவே வெளிப்படையான புரிதலை நன்மை தரும்.. ட்டாம் இடத்தில் புதன் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.. சுக்கிரனும் மறைவு ஸ்தானத்தில் இருப்பதால் வருமானத்தின் ஒரு பகுதியை இந்த வாரம் ஆடம்பர பொருட்களுக்கு செலவு செய்வீர்கள் குறைத்து கொள்வது நல்லது.!!

ஒன்பதில் சூரியன் இக்காலகட்டங்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது அவர்களின் முழு பயணம் நமக்கு பெற்று தரும்.!!!

பத்தில் கேது தானதர்மங்கள்செய்யவும் கிரக தோசங்களில் இருந்து விடுபடலாம்.!!

இந்த வாரம் வழிபட வேண்டிய கடவுள் சூர்யபகவான், சனிபகவான்.

இந்த வாரம் ராசியான கிழமை வியாழன்,செவ்வாய்

இந்த வாரம் ராசியான நிறம் மஞ்சள்,சிவப்பு.!!

வெள்ளி,சனிக்கிழமைகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம்.!!

மிதுன ராசி நேயர்களே..!
இந்தவாரம் உங்கள்ராசியதிபதி புதன் ஏழில் கேந்திரம் பெற்று பாக்கியாதிபதி சுக்கிரனோடு சேர்ந்து ஏழில் இனைந்து அமர்ந்து இருப்பது அற்புதமான யோகம்.!!
நீங்கள் புது முயற்சிகளில் ஈடுபடலாம் வெற்றிகிட்டும். சிலர் தேடி வந்து உதவுவார் கள் மூன்றில் ராகு அஷ்டலஷ்மி யோகத்தை கொடுக்கும்.. நான்கில் வியாழன் வக்கிரம் பெற்று இருப்பதால் தாய்க்கி சில மருத்து செலவுகள் கொடுக்கலாம் தட்சிணாமூர்த்திக்கி அர்ச்சனை செய்வது உத்தமம். ஐந்தில் செவ்வாய் இக்காலகட்டங்களில் பொதுப்பணிகளில் ஈடுபட வேண்டாம். ஆறில் இருக்கும் சனி எதிரிகளும் உங்களிடம் ஆலோசனை பெறும் காலம் இது.!!
நேர்மையானவன் என்ற புகழ் வந்து சேரும் எட்டில் இரக்கும் சூரியனால் சருமப் பிரச்சனைகள் கொடுக்கலாம் கவனம் தேவை ஒன்பதில் கேது தந்தை வழி யில் உள்ள ஒரு பெண்னுக்கு சில பாதிப்புகளை கொடுக்கும்.!!
இந்த வாரம் உங்களுக்கு ராசியான நிறம் நீலம்.!!
இந்த வாரம் வழிபட வேண்டிய கடவுள் விநாயகர் பெருமான்.
இந்த வாரம் ராசியான கிழமை புதன்,வியாழன்
இந்த வாரம் ஞாயிறு,திங்கள் கிழமைகளில்
சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் .!!!

கடக ராசி நேயர்களே…!

உங்கள்ராசியதிபதி இந்தவாரம் ஐந்தில் நீசம் பெற்றும், நீசமான சந்திரன் வீட்டின் அதிபதி செவ்வாய் கேந்திரம் பெற்றிறுப்பதால் பலமுடன்தான் இந்த வாரம் தொடங்குகிறது தொழல் நன்றாக இருக்கும் பொருளாதாரம் சீரானநிலையில் இருக்கும் குடும்ப ஸ்தானத்தில் ராகு இல்வாழ்க்கையில் கவனம் அனுசரித்து போவது நல்லது ராகு,கேது திசை நடந்தால் பரிகாரம் பன்னவும் மூன்றில் வக்கிரம் பெற்ற வியாழன் சகோதர ஒத்துழைப்பு, அவர்களினால் உதவி பெற்றுதரும், நான்கில் செவ்வாய் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை கொடுக்கும் உணவு விசயத்தில் கவனம் அதே வேளையில் யோகாதிபதி நான்கில் அமர்வது தாயினால்உதவிகள் கிடைக்கும் ஐந்தில் சனி பகவான் இருப்பது நன்மைதான் தொழெில் ரீதியாக உள்ள தடைகள் விலகும் ஆறில் புதன் ,சுக்கிரன் இனைவு கலைத்துறையில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் ஏழில் சூரியன் இருந்து லக்கினத்தை பார்ப்பது அரசாங்க ரீதியாக இதுவரை தடைபெற்று வந்த காரியங்கள் இனி டங்கள் இன்றி நடக்கும் எட்டில் கேது இருப்பது கும்பகேது நன்மைகள் செய்யும் தீடிர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உருவாகும்.!!

இந்த வாரம் வழிபட வேண்டிய கடவுள் செவ்வாய்பகவான்,துர்க்கை அம்மன்

இந்த வாரம் ராசியான கிழமை சனிகிழமை.

இந்த வாரம் ராசியான நிறம் வெள்ளை.!!

சிம்ம ராசி நேயர்களே….!

இந்த வாரம் உங்கள் ராசியதிபதி ஆறிலும் தனஸ்தானத்தில் குரு பகவான் வக்கிரம் பெற்ற நிலையில் இந்த வாரம் தொடங்குகிறது தொழில் மிக கவனம் தேவை செல்வந்தராக இருப்பினும் கடனாளியாக நேரிடும் எனவே கடன் பெற்று தொழில் பன்னாதீர்கள் வக்கிரம் பெற்ற குரு செலவுகளை கொடுக்கும், மூன்றில் செவ்வாய் சதோதர ரீதியில் பிரச்சனைகளை கொடுக்கும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது ஜாதகத்தில் திசா புத்திகள் சாதகமாக இல்லாவிட்டால் நான்கில் சுக்கிரன்,சனி சேர்க்கை பாலியல் ரீதியாக அவமானங்களை கொடுத்து விடும்.!!

ஐந்தில் புதன் சாதகமாக இருக்கிறது தங்களின் மதி நுட்பத்தால் எதையும் வெல்வீர்கள் ஏழில் கேது கும்ப கேது பாதிப்பகள்தராது எனினும் மனைவியிடம்,நண்பர்களிடம் விவாதங்களை விர்ப்பது நல்லது ராகு பகவானுக்கு கண்டிப்பாக பீரித்தி செய்யவும்.!

இந்த வாரம் வழிபட வேண்டிய கடவுள் தட்சிணாமூர்த்தி.

இந்த வாரம் ராசியான கிழமை ஞாயிறு, ராசியன நிறம் மஞ்சள்.

கன்னிராசி நேயர்களே…!

உங்கள் ராசியதிபதி நான்கில் கேந்திரம் பெற்றும் ராசியில் குரு வக்கிரம் பெற்றிருக்கும் சமயத்தில் இந்த வாரம் தொடங்குகிறது பொருளாதாரா ரீதியாக முன்னேற்றம் உண்டு புதிய தொழில் சிந்தனை பிறக்கும் மனை,வாகனம் ஒன்றை வாங்குவீர்கள் இரண்டில் செவ்வாய் இருப்பதால் ஒன்றும் இல்லாவிட்டாலும் டென்சனோடு அலைவீர்கள் குறைத்து கொள்வது நல்லது.! மூன்றில் ,சனி பகவான் இளையசகோதரர் மூலமாக மகிழ்ச்சி கிடைக்கும் நான்கில் சுக்கிரன் புதிய ஆடை ஆபரனங்கள் வாங்குவீர்கள் ஐந்தில் சூரியன் விரயாதிபதி ஐந்தில் இருப்பதால் ஆண்மீக செலவுகள் அதிகரிக்கும் அன்னதானம் செய்வீர்கள் ஆறில் கேது கும்பகேது வாக இருப்பது மிக நன்மை எதை செய்தாலும் வெற்றிகள் உண்டாகும்

இந்த வாரத்தில் திருமணம் ஆகாத வர்களுக்கு அதற்குண்டான காரியங்கள் ஈடேறும்

இந்த வாரம் வழிபட வேண்டிய கடவுள் சொக்கநாதர் அல்லது புதன்பகவான்

ராசியான நிறம் பச்சை, ராசியான கிழமை வெள்ளி..!

துலாம் ராசி நேயர்களே..!

இந்த வாரம் உங்கள் ராசியதிபதி மூன்றிலும்,லாபாதிபதி மூன்றில் நீசம் பெற்று இருப்பதால் புதன்,வியாழன் கிழமைகளில் சகோதர ரீதியாக செலவுகள் மனமுவந்து செய்வீர்கள்.

இரண்டில் யோகாதிபதி சனி இருப்பதால் மனைவிமூலம் நன்மைகள்கிடைக்கும் மூன்றில் புதன் ,சுக்கிரன் சேர்க்கை வெற்றிவாய்ப்புகளை பிரகாசப்படுத்தும்.. லாபாதிபதி சூரியன் நான்கில் இருப்பதால் புதிய சொத்துக்கள்,வாகனம் வாங்குவீர்கள் ஐந்தில் இருக்கும் கும்ப கேது குல தெய்வ ஆசி பரிபூரணமாக கிடைக்கும் தற்போது குவதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது.!!!

இந்த வாரம் ராியான கிழமை புதன்,வியாழன், வணங்க வேண்டிய கடவுள் சனிபகவான், ராசியான நிறம் நீலம்.!

விருட்சக ராசி நேயர்களே..!

இந்த வாரம் உங்கள்ராசியதிபதி செவ்வாய் பகவான் மறைந்தும், லாபஸ்தாத்தில் குரு வக்கிரம் பெற்றும் ஜென்மத்தில் சனிபகவான் இருப்பதாலும் தொழில் நடக்கும் ஆனால் லாபத்தை பார்க்கமுடியாது என்ற கதைதான்.

செலவுகள்அதிகரித்து கொண்டே இருக்கும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது இரண்டாம் இடமாகிய வாக்கு ஸ்தானத்தில் புதன்,சுக்கிரன் இனைந்து இருப்பதால் பேச்சில் சாமர்த்தியசாலிகளாக விளங்குவீர்கள் உங்கள் பேச்சுக்காகவே சிலர் நட்பு பாராட்டுவார்கள் தீடிரென் முன்கோபமும் இருக்கும் குறைப்பது நல்லது மூன்றில் இருக்கும் அசாத்திய துணிச்சலை கொடுக்கும் அதை இவ்வேளையில் காட்டக்கூடாது நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது நான்கில் கேது தாய்வழி குலதெய்வ வழிபாடு சிறப்பை தரும்

இந்த வாரம் வணங்க வேண்டிய கடவுள் சனி பகவான் ஆஞ்சநேயர் விநாயகபகவான் , ராசியான கிழமை புதன் ,வியாழன் , ராசியான நிறம் கருநீலம், பச்சை.!

தனுசு ராசி நேயர்களே…!

உங்கள் ராசியதிபதி பத்திலும், லாபஸ்தானாதிபதி சுக்கிரன் லக்கின கேந்திரத்திலும் அமர்ந்திருப்பது சிறப்பு .!!

தொழில் ரீதியாக வளர்ச்சிகள் காண்பீர்கள் பொருளாதாரம் நன்றாக இருக்கும் ஒன்பதாம் இடத்து அதிபதி சூரியன் தனஸ்தானமாகிய இரண்டாம் இடத்தில் இருப்பது சிறப்பு தந்தை வழி உதவிகள் கேட்டவுடன் கிடைக்கும் குல தெய்வ வழிபாடு மிகுந்த நன்மையளிக்கும் மூன்றில் கேது காது சம்பந்தப்பெற்ற பிரச்சனைகள் கொடுக்கும் பாதிப்பு இல்லை..!!

ஒன்பதில் ராகு தந்தைக்கி மருத்துவ செலவுகள்உண்டாகும் ஜாதக்தில் ராகுதிசை நடந்தால் தந்தைக்கி சிரமங்கள் கொடுக்கும் ராகு பீரித்தி செய்யவும் விரயாதிபதி லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார் இக்கால கட்டத்தில் செலவுகளை யோசித்து செய்வது நல்லது..

இந்த வாரம் வழிபட வேண்டியகடவுள் பைரவர் , ராசியான கிழமை ஞாயிறு,புதன் , ராசியான நிறம் மஞ்சள்.!!

மகர ராசி நேயர்களே…!

உங்கள் ராசியாதிபதி பதினொன்றிலும் லாபாதிபதி யும் பதினொன்றில் சஞ்சரிப்பதால் இந்த வாரம் அருமையாக இருக்கும்..!!

அஷ்டமாதிபதி லக்கினத்தில் இருப்பதுதான் பலவீணம் அதையும் லக்கினாதிபதி சனிபகவான் தன் மூன்றாம் பார்வையால் சூரியனை பார்ப்பதால் பாதிப்புகள் இருக்காது எட்டாம் இடத்தில் ராகு இருப்பதால் இது முக்கியமாக மணவாழ்க்கையையத்தான் பாதிக்கும் ஜாதக ரீதியாக திசா புத்திகளின் அடிப்படையில் பரிகாரங்கள் மேற்கொள்வது நல்லது ஒன்பதில் வக்கிரம் பெற்று இருக்கும் குரு பகவானால் நன்மையே தொழில் நன்றாக இருக்கும் பத்தில் இருக்கும் செவ்வாய்பகவானால் விரயங்கள் வந்த பின்பே வரவுகள் வரும் எனற நிலை இருக்கும் புதனும்,சுக்கிரனும் இனைந்து மவைு ஸ்தனாத்தில் இருப்பது தாழ்வு மனப்பான்மையை கொடுக்கும் அதில் இருந்து விடுபடுங்கள்

இந்த வாரம் வழிபட வேண்டிய கடவுள் சக்கரத்தாழ்வார்

இந்த வாம் ராசியான கிழமை சனி,புதன்

இந்த வாரம் ராசியான நிறம் கருப்பு,இளம்பச்சை.

கும்ப ராசி நேயர்களே..!

இந்த வாரம் உங்கள் ராசியாதிபதி பத்திலும்,லாபாதிபதி ஒன்பதில் கோணம் பெற்றிருக்கிற நிலையில் தொடங்குகிறது தொழில் நன்றாக இருக்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர் விளையாட்டுதுறையில் மாணவர்கள் புதிய சாதனைகள் நிகழ்த்துவர் எட்டாமிட வக்கிர குருவால் பாதிப்பு இல்லை ஒன்பதில் இருக்கும் செவ்வய் தந்தைக்கி மருத்துவ செலவுகள் வந்துவிலகும் லக்கினாதிபதி பத்தில் கேந்திரம் பெற்று இருப்பதால் சனி பகவான் நன்மைகளையே செய்யும் தொழில் புதிய புதிய வாய்ப்புகள் உருவாகும் அதை நன்றாக பயன்படுத்தி கொள்ளுங்கள்

இந்த வாரம் வழிபட வேண்டிய கடவுள் விநாயகபெருமான் , ராசியான நிறம் நீலம்,ஆரஞ்சு, ராசியான கிழமை செவ்வாய்,புதன்

மீனராசி நேயர்களே..!

இந்தவாரம் உங்கள் ராசியதிபதி ஏழில் வக்கிரம் பெற்றும் லாபாதிபதி சனிபகவான் ஒன்பதில் கோணம் பெற்றும் இந்த வாரம் தொடங்கவதால் சாதகமான பலன்களே நடக்கும் ஆறில் ராகு சில வழக்குகள் முடிவுக்க வரும் உங்களுக்கு சாதகமாக வரம் பூமி சம்பந்தமான பிரச்சனைக் விலகி உங்கள் சொத்துக்கள் உங்களுக்கே வந்து சேரும்.!!

எட்டாம் இடத்தில் உள்ள செவ்வாய் சிறவர்ளுக்கு சில விபத்துக்களை கொடுத்துவிடும் அர்ச்சனை செய்வது நல்லது பத்தில் புதன்,சுக்கிரன் இனைவு உங்கள் வாழ்வியல் மாற்றங்களையே தரும் நேரம் இது ஆறாமிடத்து சூரியன் லாபஸ்தானத்தல் இருப்பது நன்மையே நம்பிக்கை இல்லாமல் தொழில் செய்து வருபவர்கள் முழு ஈடுபாட்டடேன் தொழில் செய்து வருவீர்கள்..!!

இந்த வாரம் உங்களுக்கு ராசியன கிழமை வியாழன், ராசியன நிறம் சிவப்பு வெள்ளை, வழிபட வேண்டிய கடவுள் அகஸ்தியர்.!!

Goto Top