சென்னை
 
மிழகத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் 100 நாள்கள் வேலைத் திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும் என்று வந்தவாசியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வரும் முதல் எடப்பாடி பழனிச்சாமி, ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் செஞ்சி வெ.ஏழுமலையை ஆதரித்து செய்யாறு பேருந்து நிலையம் தேர்தல்  பிரசாரம் செய்தார்.

அப்போது,  மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவே பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதாக கூறியவர்,  மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தால் விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவோம் என்றும், தற்போது ஏழை தொழிலாளர் கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 நாள்கள் வேலைத் திட்டத்தை 200 நாள்களாக உயர்த்துவோம் என்று உறுதி அளித்ததார்.

தொடர்ந்து பேசியவர், நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதை திமுகவினர் மதவாதம் என்கின்றனர். ஆனால், 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது திமுக. அப்போது பாஜக மதவாதக் கட்சியாக அவர்களுக்குத் தெரியவில்லையா? என்று கேள்வி எழுப்பியவர், ஏற்கனவே அதிமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியபடி, மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள், திருமண உதவித் திட்டம், கிராமம்தோறும் நடமாடும் மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை  நிறைவேற்றி உள்ளது. அதுபோல, தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்றும்,   ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் செஞ்சி வெ. ஏழுமலையை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.