விக்ரம் சாராபாயின் 100-வது பிறந்தநாள்: கூகுள் டூடுள் வெளியிட்டு கவுரவம்

ந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை விக்ரம் அம்பாலால் சாராபாய் அவர்களின் 100வது பிறந்த நாள் இன்று. இதனை நினைவு கூறும் விதமாக கூகுளின்  டூடுலில் இவரின் சித்திரம் வெளியிட்டு மரியாதை செலுத்தியுள்ளது.

அறிவியில் துறையின் இந்தியாவின் வளர்ச்சிக்கு அரும்பங்காற்றியவர் விக்ரம் சாராபாய். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு அடித்தளம் இட்ட இவரது அயராத முயற்சியால், 1975ம் ஆண்டு இந்தியாவின் முதல் செயற்கைகோள் விண்ணில் சீறிப் பாய்ந்தது. அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நிலையில், இந்தியா சந்திரயான்-2 வெற்றிகரமாக செலுத்தி விண்வெளி ஆய்வில் புதிய மைல் கல்லை எட்டி உள்ளது.

1962ம் ஆண்டு இஸ்ரோவை நிறுவிய விக்ரம் சாராபாய், இந்தியாவின் முதல் செயற்கை கோளான ஆர்யபட்டாவை உருவாக்கியதில் இவருடைய பங்கு மிகவும் முக்கியமானது. ஆனால் அவர் இறந்த பின்பு நான்கு வருடங்கள் கழித்தே அந்த செயற்கை கோள் ரஷ்யாவின் உதவியுடன் விண்ணில் ஏவப்பட்டது. அவருடைய நினைவால் தான் தற்போது சந்திராயனில் பொருத்தப்பட்டிருக்கும் லேண்டருக்கு விக்ரம் என்று பெயர் இடப்பட்டுள்ளது.

கூகுள் டூடுலில் இடம் பெற்றிருக்கும் சாராபாயின் டூடுல் சித்திரத்தை மும்பையை சேர்ந்த பவன் ராஜுக்கார் வரைந்துள்ளார்.

விக்ரம் சாராபாயின் நூற்றாண்டு விழாவையொட்டி கூகுள் நிறுவனம் டுடூலை வெளியிட்டு அவருக்கு பெருமை சேர்த்துள்ளது.

 

கார்ட்டூன் கேலரி