100வது டெஸ்ட் – வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா புதிய சாதனை!

அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் வரலாற்றில், மொத்தம் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை செய்துள்ளார் இஷாந்த் ஷர்மா.

இந்த சாதனையை இதற்குமுன் செய்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் கபில் தேவ். மேலும், இந்த சாதனையை செய்துள்ள நான்காவது இந்தியப் பந்துவீச்சாளராகியுள்ளார் இஷாந்த் ஷர்மா.

இதற்கு முன்னர், அனில் கும்ளே 132 டெஸ்ட் போட்டிகளிலும், கபில் தேவ் 131 டெஸ்ட் போட்டிகளிலும், ஹர்பஜன்சிங் 103 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடியுள்ளனர். இவர்களையடுத்து, இஷாந்த் ஷர்மா தற்போது 100வது டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறார்.