கொரோனா தொற்றில் மீண்ட பிரபல நடிகை படப்பிடிப்பிற்கு தயார் ஆகிறார்..

’பொன்னியின் செல்வன்’ சரித்திர படத்தை இயக்குகிறார் மணிரத்னம். இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றி தகவல் வெளிவந்தது.இதில் தற்போது யார் என்னென்ன கேரக்டரில் நடிக்கின்றனர் என்ற தகவல் கசிந்திருக்கிறது.
ராஜராஜசோழன் கேரக்டரில் ஜெயம் ரவியும் வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி, பிரபு மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் பெரிய பழுவேட்ட ரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் நடிப்பதாகவும் தகவல் வந்தது தற்போது சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் சரத்குமாருக்கு பதிலாக நிழல்கள் ரவி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பெரிய பழுவேட்ட ரையர் வேடத்தில் பிரபுவே நடிப்பார் என்றும் சரத்குமாருக்கு வேறு ஒரு முக்கிய கேரக்டர் இந்த படத்தில் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கதைப்படி பெரிய பழுவேட்டரையரின் காதலியாக நந்தினி என்ற கேரக்டர் இருக்கும். அப்படியானால் நந்தினி கேரக்டரில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார். இன்னும் ஒரு கதாபாத்திரத்திலும் ஐவர்யாராய் நடிக்கிறார். அமிதாப், ஐஸ்வர்யாய் என குடும்பமே கொரோனா தொற்றுக்குள்ளானது. அவர்கள் அனைவரும் தொற்றிலிருந்து மீண்டனர். அமிதாப் சில தினங்களுக்கு முன் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அடுத்து மணிரத்னம் படத்தில் நடிக்க ஐஸ்வர்யாராய் தயாராகி வருகிறார்.