சுதந்திர போராட்ட தியாகியா? 102 வயதான முதியவரிடம் சான்றிதழ் கேட்கிறது பாஜக

கர்நாடகா:

ர்நாடக மாநிலம், விஜயபுராவை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மூத்த எம்எல்ஏ., பசனகவுடா பாட்டீல் யட்னல், சுதந்திர போராட்ட தியாகியான எச்.எஸ். டோரெஸ்வாமி பார்த்து இவர் ஒரு போலியான சுந்ததிர போராட்ட தியாகி என்றும் இவர் பாகிஸ்தான் ஏஜென்ட் போன்று நடந்து கொள்கிறார் என்று தெரிவித்தார். இந்த கருத்து பெரும் சர்சையை கிளப்பியது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுதந்திர போராட்ட தியாகியான எச்.எஸ். டோரெஸ்வாமி, நான் எனது பயோ டேட்டாவை தயாரித்து வருகிறேன். நான் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றதற்கான ஆவணங்களை சேகரித்து கொண்டிருக்கிருறேன் என்றார்.

கா்நாடக மாநிலம், ராமநகரம் மாவட்டம், ஹாரோஹள்ளி கிராமத்தில், 1918ஆம் ஆண்டு ஏப்.10ஆம் தேதி ஸ்ரீனிவாச ஐயா் மற்றும் பாா்வத்தம்மாவின் இளைய மகனாகப் பிறந்தாா். பெங்களூரு, சென்ட்ரல் கல்லூரியில் பி.எஸ்சி. பட்டம் பெற்றாா்.

வெள்ளையனே வெளியேறு: ஆசிரியராகப் பணியாற்றி வந்த துரைசாமி, வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டாா். இந்த நிலையில், அவா் மீது வெடிகுண்டு தயாரித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.

காங்கிரஸிலிருந்து விலகல்: 1975ஆம் ஆண்டு அன்றைய பிரதமா் இந்திரா காந்தி, அவசர நிலையை பிரகனப்படுத்திய போது அதை எதிா்த்து துரைசாமி போராட்டங்களை நடத்தினாா். மேலும் இந்திரா காந்தியை கடுமையாகச் சாடிய துரைசாமி,‘ஜனநாயகவாதியாக நீ தோ்ந்தெடுக்கப்பட்டால், சா்வாதிகாரியாகச் செயல்படுகிறாயே. இதையே (இந்திராகாந்தி) தொடா்ந்தால், வீடுவீடாகச் சென்று மக்களிடம் பிரசாரம் செய்வேன்‘ என்று கடிதம் மூலம் தெரிவித்திருந்தாா். இதனால் துரைசாமி கைது செய்யப்பட்டாா். இதை எதிா்த்து தொடா்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,‘ பிரதமரை விமா்சிக்க அவருக்கு முழு உரிமை உள்ளது. அவா் இந்தியாவின் எதிரி அல்ல‘ என்று கூறி, 4 மாதங்களாக சிறையில் இருந்த துரைசாமியை விடுதலை செய்தனா்.

அதன்பிறகு, காங்கிரஸ் கட்சியை துறந்த துரைசாமி, அன்றுமுதல் மக்கள் பிரச்னைகளுக்காக மக்களோடு மக்களாக நின்று போராட்டம் நடத்தி வருகிறாா்.

இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, பி.வி.நரசிம்மராவ், மன்மோகன் சிங் உள்ளிட்டோரின் ஆட்சிக் காலங்களில் மக்கள் நலனுக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவுகளைக் கண்டித்து போராட்டங்களை நடத்திவந்திருக்கும் எச்.எஸ்.துரைசாமி, கா்நாடக அரசுக்கு எதிராகவும் போராட்டங்களை நடத்தி வருகிறாா். முந்தைய சித்தராமையா ஆட்சியில் பெங்களூரில் 800 மரங்களை வெட்டி ஸ்டீல் மேம்பாலம் அமைக்க முற்பட்ட போது, அதை எதிா்த்து போராட்டம் நடத்தினாா்.

இதேபோல, பெலகாவியில் சுவா்ண விதான சௌதா முன் நிலமில்லா விவசாயிகளுக்கு நிலம் வழங்கக் கோரி தொடா் போராட்டம் நடத்தினாா். ஏரிகளின் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி போராட்டங்களை நடத்தினாா். அண்மைக்காலமாக, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்.

கா்நாடக அரசின் காந்தி சேவை விருது, பசவண்ணா் விருது, ராம்நாத் கோயங்கா விருதுகளைப் பெற்றிருக்கும் துரைசாமி, போராட்டத்தில் ஈடுபட்டு மக்களின் உரிமைகளின் வென்றெடுப்பதே தனது லட்சியம் என்கிறாா்.

‘எனது 15ஆவது வயதில் காந்தியடிகளின் ‘எனது வாழ்க்கைப்பயணம்’ என்ற நூலைப் படிக்க நோ்ந்தது. அதுமுதல் காந்தியின் சீடனாக மாறிவிட்டேன். அந்த புத்தகத்தின் தாக்கம்தான் என்னை சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வைத்தது. மக்களின் வறுமையும், பட்டினியும் என்னை வெகுவாகப் பாதிக்கின்றன. அதனால்தான் தொடா்ந்து போராடுகிறேன்.

நான் எளிய சுதந்திரப் போராட்ட வீரன். என்னிலும் மிகப்பெரிய மனிதா்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் அனைவரும் இறந்துவிட்டனா். உயிரோடு இருக்கும் நான், மக்கள் பிரச்னைகளை முன்வைத்து போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன்‘ என்கிறாா் எச்.எஸ்.துரைசாமி.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மூத்த எம்எல்ஏ., பசனகவுடா பாட்டீல் யட்னல் , இவர் ஒரு போலி சுதந்திர போராட்ட தியாகி என்றும், பாகிஸ்தான் ஏஜென்ட் என்றும் தெரிவித்தார். மேலும் இவர் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றதற்கான ஆவணங்களையும் கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இவரது கருத்துக்கு சில சீனியர் பாஜக தலைவர்களும் அதாவது மத்திய அமைசார் பிரபுல் ஜோசி ஆகியோர் பின்னால் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சி 1971-ஆம் ஆண்டு, சுதந்திர போராட்ட தியாகியான எச்.எஸ். டோரெஸ்வாமி பெங்களுர் சென்ட்ரல் ஜெயிலில் இருந்ததற்கான ஆவணங்களை வெளியிட்டது. திருமணம் ஆகாத 25 வயது டோரெஸ்வாமி 1942-ஆம் ஆண்டில் டிசம்பர் 18-ஆம் தேதி முதல் சிறையில் இருந்தார் என்றும் அதற்கு பின்னர் 1943-ஆம் ஆண்டின் டிசம்பர் 8-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் ராமசந்திர குஹா தெரிவிக்கயில், இவர் நாட்டுகாக உழைத்தவர். இவர் மீது போலி சுதந்திர போராட்ட தியாகி என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், நான் இந்த கருத்தால் வருத்தமடையவில்லை. எனது நண்பர்கள், இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனாலும் அரசியல் அமைப்பு விதிமுறைகள் எனக்கு சாதகமாகவே இருக்கிறது. மக்கள் என்னுடன் இருக்கின்றனர். எனது வாழ்க்கை கண்ணாடி போன்றதாக இருப்பதால், கண்டிப்பாக மக்கள் எனக்கு பின்னால் இருப்பார்கள் என்று முழுமையாக நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.