102 வருடத்திற்கு முன்பு இந்தியாவைத் தாக்கிய பெருந்தொற்று : பாம்பே இன்ஃப்ளூயன்ஸா’

ன்று உலக சுகாதார நிறுவனம் நாவல் கொரோனோவைரஸ் அல்லது கோவிட்19 என்று அழைக்கப்படும் பெருந்தோற்று நோய் உலகத்தையே பரபரப்பில் வைத்துள்ளது. ஆனால் இதுவரை  ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்களையும், 4000க்கும் மேற்பட்டவர்கள் இறந்தும் உள்ளனர். அதே சமயம் 50,000 மேற்பட்டோர் குணமடைந்தும் உள்ளனர்

இதை கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது  இந்த வருடத்திலிருந்து 102 வருடங்களுக்கு முன்னால் மிகச்சரியாக 1918ம் ஆண்டு இந்தியாவில் இப்போதைய கொரோனாவைரசை விட கொடிய வைரஸ் ஒன்று ஒரு கோடியிலிருந்து இரண்டு கோடிக்கும் அதிகமானோரைப் பலி வாங்கிய கதை ஒன்று உள்ளது.

அது தெரியுமா? உங்களுக்கு

உலகம் முழுதும் 5 கோடியிலிருந்து 10 கோடி பேரைப் பலி வாங்கிய ஸ்பானிஸ் இன்ஃப்ளூயன்ஸா என்ற தொற்று இந்தியாவில் மட்டும்  ஒரு கோடியிலிருந்து இரண்டு கோடிக்கும் அதிகமானோரைப் பலி வாங்கியது. உலக அளவில் 5 ல் ஒரு இந்தியர் மரணமடைந்தார். இந்தியாவில் இந்த தொற்று நோயைப் பம்பாய் இன்ஃப்ளூயன்ஸா, பம்பாய் காய்ச்சல் என்ற பெயரில் அழைத்துள்ளனர்

மே மாதம் 1918 பம்பாய் துறைமுகம் வழியாக இந்த நோய் பம்பாயைத் தாக்கியது என்றும், ஓர் இரவில் மும்பைக்குள் திருடனைப்போல் நுழைந்தது இந்த நோய் என்றும் அப்போதைய மருத்து அதிகாரியாக இருந்து ஜே.ஏ.டர்னர் தெரிவித்துள்ளார்

மும்பையில் 7 காவல் துறைப்பணியாளர்கள் மலேரியா அல்லது காய்ச்சால் காவல்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் , அதன்பின் விரைவில், ஒரு கப்பல் நிறுவனமான பம்பாய் துறைமுகம் , ஹாங்காங் மற்றும் ஷாங்காய் வங்கி, தந்தி அலுவலகம், புதினா மற்றும் ரேச்சன் சசூன் மில்ஸ் ஆகியவற்றின் ஊழியர்களும் நோய்வாய்ப்பட்டனர்.

இந்த பெருந்தொற்றின் ஆரம்பக்கட்ட தாக்கம் மிக அதிகமாக இருந்து. குறிப்பாக 20 வயதிலிருந்து 40 வயது வரை உள்ளவர்கள் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டனர்

அப்போதைய ஆராய்ச்சியாளர் டேவிட் அர்னால்ட், ‘மரணம் மற்றும் நவீன சாம்ராஜ்யம்: இந்தியாவில் 1918-19 இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய்’ என்ற தலைப்பில், எழுதியுள்ள கட்டுரையில் இரண்டாம் கட்ட தொற்று நோய் தாக்கம் மிகவும் ஆபத்தாக இருந்தது  என்று எழுதியுள்ளார்,

“அக்டோபர் 6, 1918 இல் ஒரு நாளில் மட்டும், பம்பாய் நகரத்தில் 768 பேர் காய்ச்சலால் பதிவு செய்யப்பட்டுள்ளனர், 1890 கள் மற்றும் 1900 களில் பிளேக் தொற்றுநோயின் உச்சத்தை விட அதிகமான இறப்புகள்” என்று அர்னால்ட் பதிவு செய்துள்ளார்

அதன் பின்னர் இந்த நோய்த் தொற்று மும்பையிலிருந்து பஞ்சாப், உத்திர பிரதேசத்திற்கும் அதிகமாகப் பரவியது

சூர்யகாந்த் திரிபாதி எனும் கவிஞர் இந்த மும்பை இன்ஃப்ளூயன்ஸா எனும் நோய்த் தொற்று எப்படியெல்லாம் இந்தியாவைப் பாதித்துள்ளது என்பதைப் பற்றி அவர் ’’ Spanish flu of 1918 [that] changed India’’ என்ற பெயரில் பதிவு செய்துள்ளார்

தன் வாழ்க்கையில் விசித்திரமான நேரம் … அவரின் குடும்பமே ஒரே கண் சிமிட்டலில் காணாமல் போனது என்றும் எங்கள் பங்குதாரர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் இறந்தனர், அவரின் உறவினருக்காக பணிபுரிந்த நான்கு பேரும், அவருக்காக பணியாற்றிய இருவருமே இறந்துவிட்டார்கள் ”என்றும், கங்கை முழுதும் இறந்த உடல்களே காணக்கிடைத்தன என்றும் திரிபாதி அதில் குறிப்பிட்டுள்ளார்

பம்பாய் இன்ஃப்ளூயன்ஸா  நோய் மூன்று கட்டமாக இந்தியாவில் வந்துள்ளது. முதல் கட்டமாக  மே மாதம் வந்த இன்ஃப்ளூயன்ஸா , முதல் உலகப்போர் முடிந்து  நாடு திரும்பிய படையினர் பம்பாய் துறையில் முகத்தில் இறங்கிய தருணம் மீண்டும் ஆரம்பித்தது. அதன்பின் இரயில்கள் வழியே அந்த நோய் மனிதர்களுடன் பயணப்பட்டு தொடர்ந்து செல்லும் இடங்களில் எல்லாம் மரணம் அதிகரித்துக்கொண்டேயிருந்தது

அந்த நேரத்தில் கடுமையான வயிற்றுப்போக்கிலிருந்து மீண்டு வந்த மகாத்மா காந்தி, ‘கங்காபென்’ என்று உரையாற்றிய ஒருவருக்கு அவர் எழுதிய கடிதத்தில்  இந்த மும்பை இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோயையும் குறிப்பிட்டுள்ளார்.

“நம் முன்னோர்கள் கடந்த காலங்களில் இத்தகைய கடினமான உடல்களைக் கட்ட முடியும். ஆனால் இன்று நாம் பரிதாபகரமான பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டு, காற்றில் நகரும் தீங்கு விளைவிக்கும் கிருமிகளால் எளிதில் பாதிக்கப்படுகிறோம். ல். ” என்றும் அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

100 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் அவ்வளவு உயிர்ப் பலி ஆனப்பின்பும் நாம் தொடர்ந்து பயணித்துக்கொண்டு இருக்கின்றோம், அதன் பின்னரும் நாம் சுதந்திரத்திற்காகப் போராடி சுதந்திரத்தினையும் பெற்றுள்ளோம்.

இறுதியாக மும்பை இன்ஃப்ளூயன்ஸாவிற்கு அசாம் மாநிலத்தில் தடுப்பு மருந்து தயார் செய்து பயன்படுத்தியுள்ளனர் என்றும் பதிவு செய்துள்ளனர்

எனவே எல்லா நோய்களுக்கும் தீர்வு உடனே கிடைக்கவிட்டாலும் விரைவில் கிடைக்கும் என்றும் நம்புவோம். அப்போதைய காலகட்டத்தை விட இப்போது பலவகையான  நவீனத் தொழில்நுட்பங்கள் நம்மிடையே உண்டு. எனவே அச்சமின்றி நம் சுற்றுப்புற சுகாதாரத்தினை பேணிக்கோப்போம்

-செல்வமுரளி

மூலக்கட்டுரைகள்
https://openthemagazine.com/features/history/the-virus-that-killed-18-million-indians/

http://www.ijmr.org.in/article.asp?issn=09715916;year=2019;volume=149;issue=7;spage=5;epage=23;aulast=Bhargava