60 வயது ஆட்களை கொரோனா தாக்கினால், அவர்களுக்கு ‘’நாள்’’ குறித்து விடுகிறார்கள், , டாக்டர்கள்.
ஆனால் கேரள மாநிலத்தில் நூறு வயதை தாண்டிய முதியவர்கள், கொரோனாவை வென்று வெற்றிகரமாக விடு திரும்புவது வழக்கமாகியுள்ளது.

அங்குள்ள ஆலுவா பகுதியை சேர்ந்த 103 வயது முதியவர் பரீத் என்பவர் காய்ச்சல் காரணமாக உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதால், கடந்த மாதம் 28 ஆம் தேதி எர்ணாகுளத்தில் உள்ள கலமச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவரை தனி வார்டில் அனுமதித்து டாக்டர்கள்: சிறப்பு சிகிச்சை அளித்தனர். இதன் விளைவாக பரீத் 20 நாள் தீவிர சிகிச்சைக்கு பிறகு நேற்று பூரண குணம் அடைந்தார்.

அவரை மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், மற்றும் ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி, வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

கொல்லத்தில் உள்ள மருத்துவமனையில் அண்மையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அஸ்மா பீவி என்ற 105 வயது மூதாட்டி , பூரண குணம் பெற்று வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

-பா.பாரதி.