கொரோனாவை வீழ்த்திய 103 வயது முதியவர்..

கொரோனாவை வீழ்த்திய 103 வயது முதியவர்..

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் சித்தேஷ்வர் தாலோ என்ற பகுதியைச் சேர்ந்த 103 வயது முதியவர் ஒருவர் அங்குள்ள மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

20 நாட்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் பூரண குணமாகி நேற்று வீடு திரும்பினார்.

அவரது 85 வயது தம்பியும், கொரோனா தொற்று காரணமாக அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இரண்டொரு நாளில் அவரும் ’டிஸ்சார்ஜ்’ செய்யப்படுவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கொரோனாவை வீழ்த்தி வீடு திரும்பிய ‘பெருசு’ 1917 ஆம் ஆண்டு பிறந்தவர்.

அவர் பிறந்த அடுத்த ஆண்டு தான் உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்திய ‘ஸ்பானிஷ் வைரஸ்’ உருவாகி இருந்தது.

வரலாற்றில் மிகக்கொடிய வைரஸ் என்று கருதப்படும், ‘ஸ்பானிஷ் புளூ’’ உலகம் முழுவதும் 5 கோடி பேரைப் பலி வாங்கிய வைரஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

‘’ஸ்பானிஷ் வைரசையே பார்த்தவருக்கு கொரோனா வைரஸ் எம்மாத்திரம்’’ என்கிறார், முதியவருக்குச் சிகிச்சை அளித்த டாக்டர் சமீத் .

-பா.பாரதி.

கார்ட்டூன் கேலரி