சென்னை: ராமசாமி படையாட்சியார் அவர்களின் 103-வது பிறந்த நாiளையொட்டி, அவரது உருவச் சிலைக்கு  திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சுதந்திரப் போராட்ட வீரர் ராமசாமி படையாச்சியாரின் 103-ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப் படுகிறது. இதையொட்டி, கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி உள்ளிட்ட திமுகவினரும் இருந்தனர்.