சென்னை: ராமசாமி படையாச்சியாரின் 103-ஆவது பிறந்த நாளையொட்டி, கிண்டியில் உள்ள அவரது உருவசிலைக்கு தமிழக அமைச்சர்கள்  மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட வீரர் ராமசாமி படையாச்சியாரின் 103-ஆவது பிறந்த நாள் இன்று அரசு விழா வாக கொண்டாடப் படுகிறது.

முதல்வர் எடப்பாடி தலைமையிலான தமிழகஅரசு கடந்த  2018ம் ஆண்டு, சட்டமன்றத்தில் அறிவித்தபடி, மறைந்த சுதந்திர போராட்ட வீரர்  ராமசாமி படையாச்சியார் பிறந்தநாள்,   அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும், அவரது உருவப்படம் சட்டமன்றத்தில் திறக்கப்படும் எனவும் கூறியிருந்தார். அதன்படி, கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் ராமசாமி படையாச்சி உருவப்படம் திறக்கப்பட்டது. மேலும், கடலூரில்  ராமசாமி படையாச்சியார் நினைவு மண்டபம் கட்டப்பட்டு, முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று அவரது பிறந்தநாளையொட்டி,  கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு  தமிழக  அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், பாண்டியராஜன் ஆகியோர் ராமசாமி படையாச்சியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, வன்னியர் சமூகத்தினர், அரசியல் கட்சியினர் ராமசாமி படையாச்சி சிலைக்கு மரியாதை செய்து வருகின்றனர்.