இன்று மேலும் 1065 பேர், சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 1,02,985 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,63,222 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில்,  1021 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதாக தமிழக அரசு கூறி வருகிறது. இருந்தாலும் தினசரி ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகி வருகிறது.

bty

இன்று ஒரே நாளில் சென்னையில்  1065 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,02,985 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டுமே 1,303 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 88,826 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

தற்போதைய  நிலையில், , 11,983 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 20 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,176 பேர்  கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

கார்ட்டூன் கேலரி