அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக தமிழகத்தில் 108 வழக்குகள் பதிவு

சென்னை

னுமதிக்கப்படாத நேர்த்தில் பட்டாசு வெடித்ததாக 108 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

பட்டாசு வெடிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் தீபாவளி நேரத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த நேரத்தை மாநில அரசு முடிவு செய்துக் கொள்ளலாம் என தீர்ப்பு அளித்தது. அதை ஒட்டி அரசு காலை 6 முதம் 7 மணி வரையிலும் மாலை 7 முதல் 8 மணி வரை வெடிக்கவும் நேரம் நிர்ணயித்தது.

மற்ற நேரங்களில் பட்டாசு வெடிப்போருக்கு 6 மாதம் சிறை தண்டனை என காவல்துறை உத்தரவு பிறப்பித்தது. அதை ஒட்டி இன்று காலை நெல்லை மாவட்டத்தில் 6 பேர் அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்த்தாக கைது செய்யப்பட்டனர். இது மிகவும் பரபரப்பை உண்டாக்கியது. அதன் பிறகு அவர்கள் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.

அதன் பிற்கு சென்னை, கோவை, திருப்பூர் என ஒவ்வொரு மாவட்டத்திலும் கைது செய்யப்பட்டுளதாக செய்திகள் வரத் தொடங்கின. ஒரு தொலைக்காட்சி செய்தியில் இவ்வாறு தமிழகம் முழுவதும் 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.