சென்னை:

மிழகத்தில்  10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை, இன்னும் 4 நாட்களில் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இன்று  சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற புதுமை ஆசிரியர் விருதினை நிகழ்ச்சியில், கலந்துகொண்ட  அமைச்சர் செங்கோட்டையன், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இருந்து, தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர், ஆசிரியைகளுக்கு  ‘புதுமை ஆசிரியர் விருது’ வழங்கினார்.

தமிழகம் முழுவதும் உள்ள கடந்த ஆண்டு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த கல்வி யாண்டில் சமகர சிக்ஷா அபியான் மற்றும் ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி இணைந்து நடத்திய Zero Investment Innovations for Education Initiatives (ZIIEI)  பயிற்சியில் கலந்துகண்ட ஆசிரியர், ஆசிரியைகள் சமர்பித்த  கற்பித்தல் முறைகள் குறித்து தெரிவித்த கருத்துக்களில் சிறந்த கருத்துக்களை தெரிவித்த ஆசிரியைகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த விருதுக்கு தமிழகம் முழுவதும் இருந்து 523 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், சென்னை யில் மாநகராட்சி பள்ளியில் பணியாற்றி வரும்  ஆசிரியைகளில்  19 பேர் மட்டுமே புதுமை ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு செய்யப்பட்ட ஆசிரியைகளுக்கு இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், புதுமை ஆசிரியர் விருதுக்கான பதக்கமும், சான்றிதழும் வழங்கி கவுரவித்தார்.

அதைத்தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், திறன் மேம்பாடு என்ற முறையில் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த உரிய பயிற்சி விரைவில் வழங்கப்பட இருப்பதாக கூறினார்.

மேலும்,  மலேசியவில் உள்ள தனியார் நிறுவத்தின் உதவியுடன் அரசு பள்ளிகளில் பயிலும் 15 லட்சம் மாணவர்களுக்கு ‘டேப் (Tab)’ வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்த அமைச்சர், இதன் மூலம் பாடபுத்தகங்கள் இல்லாமல் க்யூ ஆர் கோட் மற்றும் பிடிஎப் வடிவில் பாடங்களை பதிவிறக்கம் செய்து படிக்கும் வசதியை விரைவில் தமிழகத்தில் கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில்  10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை, இன்னும் 4 நாட்களில் வெளியிடப்படும் என்று  அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.