சென்னை:

மிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல்10- 11 -12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தேர்வு நேரம் இரண்டரை மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பத்து, மற்றும் பன்னிரெண்டாவது வகுப்பு பொதுத்தேர்வு போல 11ம் வகுப்புக்கும்  பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை மாணவர்கள் தேர்வெழுத 2.30 மணி நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. தற்போது புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு  உள்ள நிலையில், நடப்பு கல்வி ஆண்டு முதல், தேர்வு நேரத்தை 3 மணி நேரமாக மாற்றி உத்தரவிட்டு உள்ளது.

10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து உள்ளது.,

இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், புதிய பாடத்திட்டத்தால் தேர்வெழுத கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. இதையடுத்து, பொதுத்தேர்வு எழுத மாணவர்களுக்கு கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.