சட்டப்பேரவை முடிந்ததும் 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியாகும் என தகவல்

சென்னை:
ட்டப்பேரவை முடிந்ததும் 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 17 ஆம் தேதி திடீரென்று அரசு தேர்வுத்துறை சார்பில் பிளஸ்-2 பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் பிளஸ் 2 பொதுத்தேர்வு வருகிற மே மாதம் 3-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்க இருக்கிறது. அவ்வாறு தொடங்குகிற இந்த தேர்வு அதே மாதம் 21-ந் தேதியுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறுகிறது. தேர்வு ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடைகிறது என்று கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஏப்.15ஆம் தேதிக்குள் பாடத் திட்டங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் சட்டப்பேரவை முடிந்ததும் 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியாகும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.