10வது, 12வது தேர்வு முடிவுகள்: தொலைக்காட்சி, நாளிதழில் வெளியிட தடை கோரி வழக்கு

சென்னை:

10வது, 12வது தேர்வு முடிவுகள்  தொலைக்காட்சி மற்றும் நாளிதழில் வெளியிட தடை கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த  செந்தில் குமார் என்பவர், மாணவர்களின் தற்கொலையை தடுக்கும் வகையில், 10, 12வது பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிகளியே வெளியிட வேண்டும் என்றும்,  தொலைக்காட்சி, நாளிதழ் மூலம் தேர்வு முடிவுகள் வெளியிடுவதை தடுக்க வேண்டும், 10,+2 தேர்வு முடிவுகளை அந்தந்த பள்ளிகளுக்கு அரசு தேர்வுதுறை அனுப்பிட வேண்டும் என்று குறிப்பிட்டு  உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுமீதான விசாரணை நாளை மறுதினம் நடைபெற உள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் முதல்  நடைபெற்று வந்த பிளஸ்2 பொதுத் தேர்வுகள் ஏப்.6 ந்தேதி யுடன் முடிவடைந்த நிலையில், மே 16ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என கல்வித்துறை தெரிவித்து உள்ளது. இந்நிலையில் தேர்வு முடிவுகள் குறித்த வழக்கு நாளை மறுதினம் விசாரணைக்கு வர உள்ளது.