10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது: 94.4 சதவிகிதம் தேர்ச்சி!

--

சென்னை,

மிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி எனப்படும் 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது.

இன்று காலை  காலை 10 மணிக்கு எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு வெளியானது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.4 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த தேர்வை எழுதியுள்ள சுமார்  10 லட்சத்து 38 ஆயிரம்  மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி உள்ளளனர்.

மாணவ, மாணவியருக்கு உடனடியாக அவர்களின் செல்போன் வழியாக தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு முதல் தேர்வு முடிவுகள் கிரேடு முறையில் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தில் 96.2 சதவிகிதம் மாணவியரும், 94.4 சதவிகிதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.