சென்னை:
மிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1ந்தேதி நடைபெறுவதாக மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது தேர்வு தேதியை மாற்றி அமைப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார். அதன்படி ஜூன் 15ந்தேதி தேர்வு தொடங்குவதாக அறிவித்து உள்ளார்.

கொரோனா ஊரடங்கு மே 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக உள்பட எதிர்க்கட்சி கள் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன.
மேலும் ஆசிரியர் சங்கம் சார்பில் வழக்கும் தொடரப்பட்டு உள்ளது.
இந்த நிலையில்,  10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1ந்தேதிக்கு பதில் ஜூன் 15ந்தேதி தொடங்கி 25ந்தேதி முடிவடையும் என்று தெரிவித்து உள்ளார்.
10ஆம் வகுப்பு தேர்வு ஜூன் 15 – 25 வரை நடைபெறும்.
நடைபெறாத 11 ஆம் வகுப்பு தேர்வு ஜூன் 16 அன்றும்,  12 ஆம் வகுப்பு தேர்வு ஜூன் 18 அன்றும் நடைபெறும்.
திமுகவின் எதிர்ப்புக்கு அதிமுக அரசு பணிந்துவிட்டது இதன் முலம் தெரிய வந்துள்ளது.