சென்னை:

டந்த கல்விஆண்டு முதல் பிளஸ்-2 மொழிப்பாடங்கள் ஒரே தாளாக தேர்வு நடைபெற்று வரும் நிலையில்,நடப்பாண்டில் இருந்து 10ம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கும்  இனி ஒரே தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் விருப்பமொழி மற்றும் ஆங்கில மொழிப் ஆகிய இரண்டு மொழிப்பாடங்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு பகுதிகளை மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த மொழிப் பாடங்களில் உள்ள இரண்டு பகுதிகளுக்கு தாள் 1 மற்றும் தாள் 2 என்ற இரு தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது.

தற்போது இந்த நடைமுறையை மாற்றியமைத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இரண்டு மொழிப்பாடங்களுக்கும் இனி ஒரே தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு தற்போதுள்ள நடைமுறை கல்வியாண்டிலிருந்து பொருந்தும் என்றும் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் 12ஆம் வகுப்பின் மொழித்தாள்கள் ஒரே தேர்வாக மாற்றி அமைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது 10ஆம் வகுப்பு தேர்வுகளிலும் மொழித்தாள்கள் ஒரே தேர்வாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒரே தேர்வாக ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் முறையிட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒரே தேர்வாக நடத்தப்படுவதன் மூலம், விடைத்தாள்களை ஆசிரியர்கள் அதிக நாட்கள் மதிப்பிட வேண்டாம் என்றும், அந்த நேரத்தை மிச்சப்படுத்தி கற்பித்தல் மற்றும் கல்வி மேம்பாட்டு பணியிலும் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் மதிப்பீட்டு பணி குறைவதால் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் கவனச்சிதறல் மற்றும் மன அழுத்தம் குறையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.