10வது, பிளஸ்2 சிறப்பு துணைத் தேர்வு விவரம்!

சென்னை,

டந்த மாதம் 10வது மற்றும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. அதைத்தொடர்ந்து, தேர்வு பெறாதவர்கள் சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

தற்போது, பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இதை கல்வித்துறையின் வலைதளத்துக்கு சென்று டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

அதுபோல் 10வது வகுப்பு துணைத்தேர்வுக்கான தேர்வு நடைபெறும் தேதி விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிளஸ் 2 சிறப்பு தேர்வு விவரம்:

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  தனித்தேர்வர்களும், தக்கலில் விண்ணப்பித்தவர்களும் நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.*

*6.06.2017ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

தனித்தேர்வர்களும், தக்கலில் விண்ணப்பித்தவர்களும் தங்கள் நுழைவுச் சீட்டினை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு (இந்த மாதம்) ஜூன் 23ந் தேதி முதல் ஜூலை 6ந் தேதி வரை நடைபெறும்.

எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறை தேர்வினை மீண்டும் செய்வதோடு எழுத்து தேர்விற்கும் வர வேண்டும்.

அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறை தேர்விற்கு வருகை தர வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

சிறப்பு துணைத் தேர்வுக்கால அட்டவணை

ஜூன் 23ந் தேதி – தமிழ் முதல் தாள்

ஜூன் 24ந் தேதி – தமிழ் 2வது நாள்

ஜூன் 27ந் தேதி – ஆங்கிலம் முதல் தாள்

ஜூன் 28ந் தேதி – ஆங்கிலம் 2வது தாள்

ஜூன் 29ந் தேதி – வேதியியல், அக்கவுண்டன்சி

ஜூன் 30ந் தேதி – வணிகவியல், மனை அறிவியல், புவியியல்

ஜூலை 1ந் தேதி – கணிதம், விலங்கியல்,

10வது வகுப்பு சிறப்பு தேர்வு விவரம்:

2017 பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வு ஜூன் 28ந் தேதி தொடங்குகிறது.

நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு மார்ச் 2017 பொதுத் தேர்வில் தோல்வியுற்றவர்கள் மற்றும் வருகை புரியாதவர்களுக்கு வருகிற 28.06.2017 அன்று தொடங்கி 06.07.2017 வரை நடைபெற உள்ளது.

சிறப்புத் துணைப் பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்து கொள்ளலாம்.

10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வு அட்டவணை

ஜூன் 28ந் தேதி – பகுதி I – தமிழ் முதல் தாள்

ஜூன் 29ந் தேதி – பகுதி I – தமிழ் 2வது தாள்

ஜூன் 30ந் தேதி – பகுதி II – ஆங்கிலம் முதல் தாள்

ஜூலை 1ந் தேதி – பகுதி II – ஆங்கிலம் 2வது தாள்

ஜூலை 3ந் தேதி – பகுதி III – கணிதம்

ஜூலை 4ந் தேதி – பகுதி III – அறிவியல்

ஜூலை 5ந் தேதி – பகுதி III – சமூக அறிவியல்

ஜூலை 6ந் தேதி – பகுதி IV – விருப்ப மொழிப் பாடம்

இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.