பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வேண்டாம்!: கல்வியாளர்கள் கோரிக்கை

முன்பு, பத்து மற்றும் பன்னிரண்டு (+2) வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வு இருந்தது. இந்த நிலை சமீபத்தில் மாற்றப்பட்டு பதினொன்றாம் (+1) வகுப்புக்கும் பொதுத்தேர்வு என  நடைமுறையை lதமிழ்நாடு அரசு, அமல்படுத்தி இருக்கிறது

இந்த நிலையில் “10,+1,+2 என தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பொதுத்தேர்வா” என்ற விமர்சனம் எழுந்தது. இதையடுத்து  தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன், “பதினொன்றாம் (+1) வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் எதிலும் எடுத்துக்கொள்ளப்படாது” என்று அறிவித்திருக்கிறார்.

ஆனால் அமைச்சரின் அறிவிப்பு கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கறது.

இது குறித்து கல்வியாளரும் ஆசிரியரும் எழுத்தாளருமான இரா.எட்வின் இது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்துகிறார். .

“+1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு என்று நடைமுறைப்டுத்திய தமிழக அரசு தற்போது அந்த வகுப்பில் பெரும் மதிப்பெண்கல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்று அறிவித்திருக்கிறது.

மேம்போக்காக பார்க்கப்போனால், “அப்பாடா” என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள் மாணவர்களும் பெற்றோர்களும்.

ஆனால் இது குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டியிருக்கிறது.

+1 வகுப்புக்கு பொதுத்தேர்வு என்று ஏன் அறிவிக்கப்பட்டது?

ஆகப்பெரும்பாலான மெட்ரிகுலேசன் பள்ளிகளில் +1 வகுப்பில் அந்தப் பாடங்களை நடத்தாமல், +2 பாடங்களையே நடத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால், அரசுப்பள்ளிகளில் முறையாக +1 பாடங்களைப் படித்து பிறகு (ஒரே வருடம்) +2 பாடங்களைப் படித்து பொதுத்தேர்வு எழுதுகிறார்கள். இதனால்  மெட்ரிக் மற்றும்  அரசுப்பள்ளி மாணவர்களிடையே சமனற்ற போட்டி ஏற்பட்டு அரசுப்பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

தவிர, மெட்ரிக் பள்ளியில் படித்தால் +2வில் அதிகமதிப்பெண் எடுக்கலாம் என்று ஒரு தோற்றம் ஏற்பட்டது. ஆகவே பெற்றோர், தங்கள் பிள்ளைகளை – அரசுப் பள்ளிகளைப் புறக்கணித்து – மெட்ரிக் பள்ளிகளை நாடினர். அந்த பள்ளிகளும் செழித்தன.

இந்த நிலையைப் போக்கவே +1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு என்ற நடைமுறை வந்தது. இதனால் ன் மெட்ரிக் பள்ளிகள் அதிர்ந்தன.

ஆகவேதான், “தொடர்ந்து 10, +1, +2 என்று மூன்று வருடங்களுக்க பொதுத்தேர்வா” ” என்று எதிர்ப்பின் பின்னணியில் அவர்கள் செயல்படுகிறார்கள்.

அதையம் ஏற்று, “+1 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் பொருட்படுத்தப்பட மாட்டாது” என்று பள்ளிிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துவிட்டார்.

ஆக, மீண்டும் பழைய சமனற்ற போட்டியே அரசு மற்றும்  மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கிடையே நடக்கும். தவிர +1 பாடங்களை படிக்காமல் போவது மெட்ரிக் மாணவர்களுக்கம் பெரும் இழப்பே.

+1 வகுப்புக்கு பொதுத்தேர்வு என்பது கடந்த ஆண்டுதான் நடந்திருக்கிறது. இதில்  உள்ள சிக்கல்களை குறைந்தது ஐந்தாண்டுகளாவது கண்காணித்துத்தான் களைய முடியும். இந்த நிலையில் ஏன் திடீரென “+1 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது” என்று அறிவிக்க வேண்டும்?

போகட்டும்.. இந்த பிரச்சனைக்கு  ஒரு நல்ல தீர்வு இருக்கிறது.

அதாவது பத்தாம் வகுப்புவரை பொதுத்தேர்வே வேண்டாம். அதற்கு பதிலாக +1, +2 வகுப்புகளுக்கு வருடத்துக்கு தலா 600 மதிப்பெண்கள் என்று செமஸ்டர் முறையில் பொதுத்தேர்வு வைக்கலாம்.

இப்படிச் செய்தால் +1, +2 இரண்டு பாடங்களையும் மாணவர்கள் கற்றுத் தேர்வார்கள். அவர்களது எதிர்காலத்துக்கு இது பயனுள்ளதாக இருக்கும். அரசு, மெட்ரிக் உள்ளிட்ட அனைத்து வகை மாணவர்களுக்குள்ளும் தேர்வை எதிர்கொள்ள சம வாய்ப்பு கிடைக்கும்.

இரா எட்வின்

இதை  2015ம் ஆண்டு,. பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்திருந்த கருத்துக் கேட்புக் கூட்டத்திலேயே பதிவு செய்திருக்கிறேன். இதே கருத்தை கடந்த இருபது வருடங்களாக கூறிவருகிறேன். காக்கைச் சிறகினிலே இதழிலும் தொடர்ந்து எழுதி வருகிறேன்.

இங்கே இன்னொரு முக்கியமான விசயத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

34 மேற்கத்திய நாடுகள் இணைந்து தங்கள் நாட்டு மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த  OCED என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. அதே போல தங்கள் நாட்டு மாணவர்களின் கல்வி எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய  PISA என்றொரு அமைப்பையும் ஏற்படுத்தின.

இந்த pisa அமைப்பு, கடந்த  2009 ஆம் ஆண்டு 74 நாடுகளில் மாணவர்களின் கல்வித் தரத்தை ஆராய்ந்தது.  அதில் இந்தியா 73வது இடத்தைப் பிடித்தது.

இந்த பின்னடைவுக்குக் காரணம் “புரிந்துகொண்டு கற்றலில்” நம் மாணவர்களுக்கு உள்ள போதாமைதான். நமது தேர்வு முறையை மாற்றுவதே இந்த குறையைப் போக்கும். ஆம்.. மாற்றத்துக்கு ஏற்ற காலகட்டம் இது” என்று தெரிவித்தார் கல்வியாளர் இரா.எட்வின்.

தமிழக அரசு.. தமிழக பள்ளிக்கல்வித்துறை கவனிக்குமா?

Leave a Reply

Your email address will not be published.